இயன்றமட்டும் முயற்சி செய்யுங்கள்
1. இயன்றமட்டும் ஆண்டவருக்குச் செய்யுங்கள் 2. இயன்றமட்டும் ஆலயத்திற்குக் கொடுங்கள் 3. இயன்றமட்டும் ஊழியம் செய்யுங்கள் 4. இயன்றமட்டும் சுவிசேஷம் பிரசங்கியுங்கள் 5. இயன்றமட்டும் சமாதானமாக இருங்கள்
(மற்றவர் உங்களைத் தடுத்தாலும்)
மாற்கு 14:1-9 மரியாள் ஆண்டவர்மேல் தைலத்தை ஊற்றினாள்; அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். அதற்கு இயேசு: இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள் என்றார்.
(மற்றவர் கொடுக்கத் தவறினாலும்)
1நாளாகமம் 29:1-14 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனு டைய ஆலயத்துக்கென்று... இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின் மேல் நான் வைத்தி ருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னை யும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்குக் கொடுக்கிறேன்.
(மற்றவர் உங்களை வஞ்சித்தாலும்)
ஆதியாகமம் 31:1-7 (யாக்ககோபு) என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன்... உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை
(மற்றவர் உங்களை எதிர்த்தாலும்)
ரோமர் 1:1-16 பவுல்: ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கு என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்.
(மற்றவர் உங்களை பழித்தாலும்)
ரோமர் 12:7-21 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். கூடுமானால் உங்களால் ஆனமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்... நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வெல்லு
Author: Rev. M. Arul Doss
Author: Rev. M. ARUL DOSS