மாற்கு 14:1-9

14:1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
14:2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
14:3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
14:4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
14:5 இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
14:6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
14:7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
14:8 இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
14:9 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.




Related Topics


இரண்டு , நாளைக்குப்பின்பு , புளிப்பில்லாத , அப்பஞ்சாப்பிடுகிற , பஸ்காபண்டிகை , வந்தது , அப்பொழுது , பிரதான , ஆசாரியரும் , வேதபாரகரும் , அவரைத் , தந்திரமாய்ப் , பிடித்துக் , கொலைசெய்யும்படி , வகைதேடினார்கள் , மாற்கு 14:1 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 14 TAMIL BIBLE , மாற்கு 14 IN TAMIL , மாற்கு 14 1 IN TAMIL , மாற்கு 14 1 IN TAMIL BIBLE , மாற்கு 14 IN ENGLISH , TAMIL BIBLE Mark 14 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 14 TAMIL BIBLE , Mark 14 IN TAMIL , Mark 14 1 IN TAMIL , Mark 14 1 IN TAMIL BIBLE . Mark 14 IN ENGLISH ,