முக்கியக் கருத்து
- விசுவாசிகள் உள்ளத்தில் எழும் குழப்பமான கேள்வி.
- தேவன் அதற்கு தரும் பதில்.
- இது ஒரு கட்டளைகளின் சங்கீதம்.
1. விசுவாசிகளின் உள்ளத்தில் எழும் குழப்பங்கள்.
1. பொல்லாதவர்கள் நீதிமானுக்கு தீங்கு நினைக்கிறார்கள் (வச.12, 14, 32).
2. பொல்லாத கொடியவன் செழிக்கிறான் (வச.35).
3. பொல்லாதவர்களின் இந்த நடக்கையால் நீதிமான் மனமடிவடைகிறான்.
2. கர்த்தர் நீதிமானுக்கு கொடுக்கும் ஆறுதலான பதில்கள், ஆலோசனைகள்.
1. பொல்லாதவர்கள் மேல் எரிச்சலடையாதே. அவர்கள் செழிப்பதை பார்த்து பொறாமையும் கொள்ளாதே (வச.1, 8).
நீதிமொழிகள் 24:19, 20.
2. நீதிமான் துன்மார்க்கன் கையிலிருந்து தப்புவிக்கப்படுவான் (வச.33, 40).
3. துன்மார்க்கனுடைய செழிப்பு தற்காலிகமானது. நிலையற்றது ஒரு புல்லைப்போல சீக்கிரத்தில் உதிர்ந்துவிடும். தேவன்
அவனை தண்டித்து ஆக்கினைத் தீர்ப்புக்கு ஒப்புக்கொடுப்பார் (வச. 2, 9, 10, 15, 17, 20, 21, 36, 38)
ஏசாயா 40: 6-8, யாக்கோபு 1:10, 11.
4. கர்த்தருடைய கிருபைக்கும், ஆசீர்வாதத்திற்கும் காத்திரு. கர்த்தருடைய நீதியில் நட .(வச.3, 5, 7, 27, 30, 31, 34).
5. கர்த்தருடைய வழியில் இவ்விதமாக நடக்கும் நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பல நன்மைகளை கர்த்தர் கொடுப்பார்.
. விழுந்தாலும் எழுந்திருப்பார்கள் (வச.24) நீதிமொழிகள் 24:16
. சந்ததி கைவிடப்படுவதில்லை (25-28)
. இருதயத்தின் வேண்டுதல்கள் தரப்படும் (4,5)
. பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள் (9, 22, 29, 34) மத்தேயு 5:5
. மிகுந்த சமாதானம், மன மகிழ்ச்சியடைவார்கள் (11, 37)
. நடைகள் உறுதிப்படும் (23, 31)
. இக்கட்டு காலத்தில் விடுவிக்கப்படுவார்கள் (17, 39, 40)
- நீதிமானுடைய வாயில் தேவன் அருளிய வேதம் இருக்கும். அவன் ஞானத்தைப் பேசுகிறான். இரங்கிக் கடன் கொடுக்கி
றான். கர்த்தரையே நம்பியிருக்கிறான்.
- துன்மார்க்கரோ கடன் வாங்கி திரும்ப செலுத்தாமற் போகிறார்கள்.
- துன்மார்க்கமாய் வரும் செல்வ திரட்சியைப் பார்க்கிலும் உத்தமமாய் வரும் கொஞ்சமே நல்லதும், மனதுக்கு சமாதானத்தைத் தருகிறதாகவும் இருக்கும். நீதிமொழிகள் 16:8
Author: Rev. Dr. R. Samuel