சங்கீதம் 130- விளக்கவுரை

முக்கியக் கருத்து

 - கர்த்தர் தமது திரளான மீட்பினால் மகா ஆழமான அக்கிரமத்திலிருந்தும் கூப்பிடுகிறவர்களை மன்னிப்பார்.
 - கர்த்தருடைய மீட்பிற்காக நாம் நம்பிக்கையோடே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.

1. (வச.1-4) - அக்கிரமத்தின் ஆழத்திலிருந்து கூப்பிடுதல்

கர்த்தாவே, ஆண்டவரே என்று இஸ்ரவேல் அழைப்பதன் மூலம்  தனது எஜமானாகிய தேவன் மிகுந்த இரக்கமும் கிருபையுமாய் நியாயம் செய்கிறவர் என்பதை தெரிவிக்கிறது. தனது ஆழமான அக்கிரமங்களில் தன்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் தேவனை நோக்கி அபயமிடும் குரலாக தொனிக்கிறது. நம்முடைய அக்கிரமங்கள் எண்ணப்படுமானால் நமது நிலமை அழிவே என்பதையும், நமது எஜமானாகிய ஆண்டவர் மன்னிக்க சித்தமாயிருக்கிறார் என்பதையும் தெரிவிக்கும் ஒரு கதறலாக இந்த ஜெபம் காணப்படுகிறது. புலம்பல் 3:22,23, 55,56 ரோமர் 7:24,25.

2. (வச.5,6) - கர்த்தருக்கு நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்

கர்த்தருடைய மீட்புக்காக ஒரு இரவு ஜாமக்காரன் பகல் விடியலுக்கு காத்திருப்பதைப்போல மிகுந்த வாஞ்சையாகவும், நம்பிக்கையுடனும் காத்திருக்கவேண்டும். பகல் விடியல் எவ்வளவு நிச்சயமோ கர்த்தருடைய மீட்பும் அவ்வளவு நிச்சயமானது. புலம்பல் 3:25, சங்கீதம் 40:1.

3. (வச.7,8) - நம்பிக்கையின் பலன்

தேவ ஜனமாகிய இஸ்ரவேல் கர்த்தரை இவ்விதமாக நம்புவது மிகுந்த பலனைக் கொடுக்கும். ஏனென்றால், அவரிடம் திரளான மீட்பும், இரக்கமும் கிருபையும் இருக்கிறது. நம் எல்லா அக்கிரமங்களையும் மன்னிக்கத்தக்க வல்லமையும் கிருபையும் கர்த்தரிடம் உண்டு. மத்தேயு 26:28, 1 யோவான் 1:9, 2:1,2.
நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படியாகத்தான் ஆண்டவராகிய இயேசு மேலோக மேன்மையைத் துறந்து அடிமையின் ரூபமெடுத்து தனது இரத்தத்தை சிந்தி, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தார். ரோமர் 5:8

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download