வெளிப்படுத்தின விசேஷம் 9-  விளக்கவுரை


அதிகாரம்- 9

‘ஏழு எக்காளங்கள் ஊதப்படுதல்’
(ஐந்தாம் ஆறாம் எக்காளங்கள்) 

‘Sounding of seven Trumpets (Fith and Sixth  Trumpets)

‘ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்;;; அப்பொழுது…’ (வச 1)

ஐந்தாம் ஆறாம் தூதர்கள் எக்காளங்களை ஊதும்போது இன்னமும் மகாகொடியதும் பெரிதுமான அழிவுகள் முன்னுரைக்கப்பட்டன.

வச- 1- 12 : ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்

யோவான் ஒரு பெரிய நட்சத்திரம் வானத்திலிருந்து விழக் கண்டான். அது பாதாள்குழியை திறந்தது. பாதாளத்திலிருந்து ஒரு பெருஞ்சூளையின் கரும்புகை எழுந்து சூரியனையும் ஆகாயத்தையும்கூட இருளடையச் செய்தது. மேலும், அந்தப் புகையிலிருந்து தேள்களின் கொடியவிஷததன்மைக்கொப்பான வல்லமைகொண்ட வெட்டுக்கிளிகள் புறப்பட்டு வந்தன.அவைகள் எந்தத் தாவரத்தையும் சேதப்படுத்தாமல் மனிதர்களை மாத்திரம் கொன்றது.
இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி பார்க்கும்போது, கரும்புகையானது எழுத்தின்படியான ஏதோ ஒரு சூளையிலிருந்து வருவது அல்ல. ஆனால், சமீபத்தில் ஐஸ்லாந்தில் எரிமலைவெடித்து கரும்புகை எழும்பி ஐரோப்பா முழுவதும் ஆகாயம் இருளைடந்து, அதனரல் விமான சேவைகளும் பல நாட்களுக்கு நிறுத்தப்பட்டு, உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருந்ததைப்போன்றவை, அதைவிட பெரிய அளவில் அந்நாட்களில் நடக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெரிய தேள்களின் விஷத்தைக்கொண்ட வெட்டுக்கிளிகள் என்பது எழுத்தின்படியாக பூதாகாரமான விஷப்பூச்சிகளல்ல. அவை பூமியிலுள்ள மனிதர்களை கொல்லும் அதிநவீன பயங்கரமான தாக்கும் சக்திகொண்ட யுத்த ஆயுதங்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
யோவேல் 2: 1- 11. இவற்றினுடைய முன்னனுபவம் இந்த காலங்களிலேயே யுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சீரியா நாடுகளிலும் நமது தேசத்தின் காஷ்மீர் பதியிலும் நடக்கும் அழிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ராணுவ ஹெலிகாப்டர்களை பார்க்கும்போது அவை பறக்கும் வெட்டுக்கிளிகளைப்போலவும் தேள்களின் கொட்டும் வால்களைக்கொண்டது போலவும் உள்ளதை நாம் காணமுடிகிறது.        

பாதாளத்திலிருந்து எழும்பிவந்தன என்று சொல்லப்படுவதின் அர்த்தம் இந்த கொடிய கொல்லும் சக்திகள் தற்போது மறைந்துள்ளன. அதாவது, வல்லரசு நாடுகளும், வல்லரசாகப்போகும் நாடுகளும் மறைமுகமாக அணு ஆயுதங்களையும், ரசாயன ஆயதங்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. சொல்லப்பட்ட அந்நாட்களில் நடக்கும் உலகப்போரில் இவை மறைககப்பட்ட இடங்களிலிருந்து திடீரென வெளிப்படும் என்ற கருத்துடையதாகும்.

பேரழிவை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சிகள் நவீன விஞ்ஞான அணுஆயுதப்போராகவும், இயற்கை சீற்றங்களாகிய காட்டுத்தீ, பெரு வெள்ளங்கள், புயல், பூமியதிர்ச்சிகளாக இருந்தாலும்,இவை அனேக காலங்களாக பெருங்குழியாகிய பாதாளத்தில் அந்தகாரச் சங்கிலிகளால் கட்டபபட்டு அந்த குறிப்பிட்ட காலத்தில் சர்வ வல்ல தேவனால் விடுவிக்கப்பட்ட அசுத்த ஆவிகளினில் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகின்றன. 2 பேதுரு 2: 4. ஆச்சரியவிதமாக, இவைகள் அந்திக்கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களை மாத்திரமே துன்புறுத்துகிறவைகளாகவும், தேவனால் நெற்றியில் முத்திரையிடப்பட்டவர்களை தொட தடுக்கப்பட்டவைகளாகவும் காணப்படுகின்றன. முத்திரையிடப்பட்டவர்களை எகிப்தில் நடந்ததுபோல தேவன் பாதுகாக்கிறார். யாத் 12: 12, 13.
எனவே, இந்த அசுத்த ஆவிகள் சாத்தான் கூட்டத்தை சேர்ந்தவைகள் அல்ல என்று காண்கிறது. மத் 12: 26. இவ்விதமாக, தெரிந்துகொள்ளப்பட்ட முத்திரையிடப்பட்டவர்கள் உபத்திரவகாலத்தில் ஜீவித்தாலும் உபத்திரவததிற்கு தப்புகிறார்கள்.

வச 13- 19 – ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்.

ஐப்பிராத்தென்னும் பெரிய நதி கீழ்படியாத இஸ்ரவேல் தேசத்தின் ஒருபகுதியின்மேல் கொடிய நாசத்தை விளைவிக்கும்படியாக கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த பகுதி மகாபாபிலோனிலும் அசீரியாவிலும் இருந்தது.சங்காரத்தூதர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டவுடனே, இயற்கை சீற்றங்களால் அழிவு துவங்குகிறது.மகாநதியாகிய ஐப்பிராத்தில் கட்டபடபட்ட தூதர்களை அவிழ்த்துவிடுவதென்பது, அவர்கள் சங்கிலிகளால் கட்டபபட்டு சிறைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள் என்பதல்ல. ஆனால்,குறிக்கப்பட்ட காலம் வரைக்கும் சங்காரக் கிரியைகளை துவங்காமல் தடைசெய்யப்பட்டிருந்தார்கள் என்பதே பொருள்.(வச 14) மூன்றிலொருபங்கு மக்கள் அக்கினி புகை கந்தகம் இவற்றால் கொல்லப்பட்டதென்பது, உலகளாவிய போரில் ராணுவ குண்டு வீச்சுகளினால் உண்டாகிறது என்பது மிகத்தெளிவாகிறது. (வச 18). இராணுவங்களின் தொகை இருபது கோடியென்றும், அவைகள் கொல்லும்படியாக கொடுக்கப்பட்ட நேரம் ஒரு மணி, ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருஷம் என்பது தேவனுடைய மிக நுணுக்கமான திட்டமிடப்பட்ட செயலேயன்றி எதேச்சையாக நடந்த சம்பவங்கள் அல்ல என்று தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.(வச 15, 16).

வச: 20,21 - இந்த வாதைகள் மிகக் கொடூரமாக இருந்தாலும், அவை தேவனை எப்போதும் எதிர்க்கும் புறஜாதி உலகத்தாரிடம் மனந்திரும்புதலைக் கொண்டுவரவில்லை. அவர்கள் தங்கள் விக்கிரக வழிபாட்டிலும் பொல்லாத செய்கைகளிலும் தொடர்ந்தே இரந்தார்கள்.எனவே, இப்படிப்பட்ட கொடிய உபத்திரவத்திற்கு அவர்கள் பாத்திரராக காணப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளால் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி அசைக்கப்படும். அவனுடைய ஆட்சியின் முடிவு சமீபமாகிவிட்டது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐப்பிராத்து நதி வற்றிப்போகும். உலகப்போர் ஆரம்பமாகும். எருசலேம் எதிரிகளால் சூழப்படும். லூக்கா 21: 20- 27.

இவைகளை வாசிக்கிற தேவ ஜனமாகிய நாம் நாம் தேசங்கள் மனந்திரும்பும்படியாக ஜெபிக்க, சுவிசேஷம் அறிவிக்க அழைக்கப்படுகிறோம் நாமும் நம் இரட்சிப்பை காத்துக்கொள்வோம். ஏசாயா 40: 8,  2 கொரி 6: 2, எபி 2: 4.

 Author: Rev. Dr. R. Samuel 


Author: Rev. S.C. Edison