வெளிப்படுத்தின விசேஷம் 8- விளக்கவுரை
அதிகாரம்- 8 ‘7 எக்காளங்கள் ஊதப்படுதல்’ வச: 1, 2 ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைக்கிறார். அப்பொழுது பரலோகத்தில் அரை மணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பூமியிலே தேவனுடைய மகாபயங்கர நியாயத்தீர்ப்பு செலுத்தப்படப்போவதால் உண்டாகப்போகும் மிகுந்த நாசங்களினிமித்தம் பரலோகமே அரைமணிநேரம் ஸ்தம்பித்து நின்றது. வச:3- 5 பரலோகத்தின் பலிபீடத்தில் ஒரு தூதன் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களால் நிரப்பபப்ட்ட பொற்கலசத்தை பிடித்து நிற்பது யோவானுக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஜெபங்கள் பூமியல் அந்த காலக்கட்டத்தில் இருந்த பரிசுத்தவான்களுடையதா அல்லது அதுவரை பூமியிலிருந்த எல்லா பரிசுத்தவான்களுடைய ஜெபமா என்று யோவானுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், பூமியிலிருந்து ஏறெக்கப்பட்ட பரிசுத்தவான்களின் ஜெபம் என்ன ? 1) தாங்கள் இந்த பூமியின் நியாயக்கேட்டினின்றும், துன்மார்க்கரிடத்திலுமிருந்து விடுதலையடைவதும் 2) பூமியிலுள்ள ஜனங்கள் பிசாசினின்றும், பாவத்தினின்றும் விடுதலை பெற வேண்டும் என்பதுமேயாகும். யாத் 30: 1. சங்கீதம் 141: 2, 9. ரோமர் 10: 1, 2 தெச 3: 2, 1 தீமொத் 2: 1, 2. பூமியிலிருந்து பரலோகத்திற்கு எழும்பின இந்த ஜெபங்களுக்கு பதில் தேவனிடமிருந்து எப்படி பூமிக்கு வருகிறதென்று பாருங்கள். இவ்விதமாக பூமியிலிருந்து பரலோகத்திற்கு தூபமாக எழும்பிய எல்லா ஜெபங்களோடு, பரலோக பலிபீடத்திலிருந்த அக்கினியை இந்த தூதன் கலக்கிறான். அதை திரும்ப பூமியிலேயே கொட்டுகிறான். தேவனுடைய பதில் ப10மிக்கு வருகிறது. மனந்திரும்பாத பொல்லாத தேசங்கள்மேல் தேவ கோபம் கொட்டப்படுகிறது. அதையே சத்தங்களும், இடிமுழுக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சிகளுமாக யோவான் காண்கிறான். 2 சாமுவேல் 22: 7, 8. சங் 46 8, 9. எக்காளம் ஒரு ஆயத்தத்திற்காகவும், எச்சரிப்பிற்காகவும் ஊதப்படுகிறது. எண்ணாகமம் 10 ஏழு எக்காளங்களில் முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுவதும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் இந்த அதிகாரத்தில் பதிவாக்கப்பட்டிருக்கிறது. அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சியின் இரண்டாவது பாகமாகிய 3 ½ ஆண்டு மகாஉபத்திரவ காலத்தில் ஊதப்படும் இந்நான்கு எக்காளங்கள், தேசங்களுக்கு தேவ கோபம் ஊற்றப்படப்போவதை எச்சரிக்கிறதாக இருக்கும். ஆனால், எச்சரிப்பைக் கேட்டு தேசங்கள் மனந்திரும்புமா ? பார்வோனைப்போல மனதை கடினப்படுத்துமா ? எசேக்கியேல் 33: 3 ஆனாலும் இந்த வெளிப்பாடு நமக்கு நிச்சயம் ஒரு எச்சரிப்பு. வச- 7 : முதலாம் எக்காளத்தின் அழிவு. வச- 8, 9 : இரண்டாம் எக்காளத்தின் அழிவு. வச- 8: 10 : மூன்றாம் எக்காளத்தின் அழிவு. வச- 8: 12 : நான்காம் எக்காளத்தின் அழிவு. வச- 13 : மற்றொரு தூதன் மத்திய வானில் பறந்து வந்து அடுத்து ஊதப்போகும் எக்காளங்களால் வரும் கொடிய அழிவுகளைப்பற்றி எச்சரித்தான். Author: Rev. Dr. R. Samuel
(முதல் நான்கு எக்காளங்கள்)
‘Sounding of 7 Trumpets (First 4 Trumpets)
‘அப்பொழுது ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளங்களை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.’ (வச 6)
இந்த ஏழாவது முத்திரை உடைத்தது ஏழு தூதர்களுக்கு எக்காளத்தை ஊத கட்டளையிட்டது போன்று அவர்கள் எக்காளங்களோடு ஆயத்தப்பட்டார்கள்.
- தாவரங்கள் அக்கினியால் எரிந்து அழிவு. எகிப்தில் தேவன் அனுப்பிய வாதைக்கு ஒப்பானது யாத் 9: 22- 26
- எரிபந்தம் போன்ற மலை(அநவநழச) யால் சமுத்திரத்தில் அழிவு. சமீபத்தில் ரஷ்யாவில் ப10மியில் விழுந்தது போன்றது.
- தீவட்டியைப்போன்ற நட்சத்திம் ஒன்று நீர்நிலைகளில் விழுந்து தண்ணீரை குடிக்க தகுதியில்லாதபடி எட்டியைப்போன்று கசப்பாக்கிற்று. தண்ணீரில்லாத பூமி. குடிநீர் தட்டுப்பாட்டுடைய நிலமைக்கு இப்பூமி தள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
- சூரியனும் சந்திரனும் இருளடையும். இரவும பகலும அந்தகாரமாகவே இருக்கும். மத் 24: 29, 30.
Author: Rev. S.C. Edison