வெளிப்படுத்தின விசேஷம் 7-  விளக்கவுரை


அதிகாரம்- 7

‘1,44,000 யூதர்கள்(இஸ்ரவேலர்) முத்திரையிடப்படுதல்
‘Sealing of 1,44,000 Jews (Israelites)’ 

1,44,000 இஸ்ரவேலர் முத்திரையிடப்படுதலும் உபத்திரவகால இரத்தசாட்சிகள் மீட்பும்

‘இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் 1,44,000 பேர்’ (வச 4)

வச: 1- 8 - இந்த உபத்திரவ காலத்தில் 1,44,000 இஸ்ரவேலர் அவர்களது நெற்றியில் முத்திரையிடப்படுவார்கள். ஓவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேராக இருப்பார்கள். கடைசி நாட்களில் தங்கள் தேவனை உத்தமமாய் தேடி, மேசியா கிறிஸ்து இயேவை ஏற்றுக்கொள்ளும் இஸ்ரவேலர் இவர்களே. இவர்கள் மேசியாவின் 1000 வருட அரசாட்சிவரை உயிருடன் இருப்பார்கள். சகரியா 13: 8, 9.  ஏசாயா 48: 10. சங்கீதம் 94: 14                  
                     
வச: 9- 17 – அந்தி கிறிஸ்துவின் காலத்தில் அவனுடைய 666 முத்திரையை வாங்க மறுப்பவர்கள் இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும்.இவர்கள் சகல ஜாதிகளிலுமிருந்து வரும் ஒருவரும் எண்ணக்கூடாதவர்களாயிருப்பார்கள். இவர்கள் வெள்ளையங்கி தரித்து, குருத்தோலைகளை தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு ‘இரட்சிப்பு…எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக’ என்று சத்தமிட்டு பாடினார்கள். இவர்கள் கிறிஸ்துவுடனே இருக்க பின்வரும் வசனங்களின்படி சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வெளி 13: 15- 17, மத் 24: 29- 31, ரோமர் 11: 25, 26. எபி 9: 14

ஆனால், இவர்கள் கர்த்தரின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஜெயங்கொண்டவர்கள் சபையில் சேர்ந்த கூட்டமல்ல. சகல ஜாதிகளிலுமிருந்து வந்து குருத்தோலைகளை கைகளில் பிடித்துக்கொண்டு     
பாடும் எண்ணமுடியாத திரள் கூட்ட ஜனங்கள்.

 Author: Rev. Dr. R. Samuel 


Author: Rev. S.C. Edison