வெளிப்படுத்தின விசேஷம் 13- விளக்கவுரை
அதிகாரம்- 13 அந்தி கிறிஸ்துவின் ஆட்சி (முதல் 3 ½ வருடம்- உபத்திரவ காலம்) அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் ஏறி வரக் கண்டேன். (வச 1) வச 1- 3: யோவான் தான் கடற்கரை மணலின்மேல் நிற்பதாகவும் சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் ஏறிவருவது போன்ற விசித்திரமான காட்சியை காண்கிறான். இந்த மிருகம் சமுத்திரமாகிய ஜனக்கூட்டத்திலிருந்து தோன்றி மிருகத்தனமாக இந்த உலகத்தை ஆட்சிசெய்யப்போகும் ஒரு மனிதனே ஆவான். அவனே அந்திகிறிஸ்து. இந்த மிருகத்தின் 7 தலைகளும் 7 சாம்ராஜ்ஜியங்களைக் குறிக்கிறது. அவை இதுவரை உலகை ஆண்ட 6 சாம்ராஜ்ஜியங்களான எகிப்து,அசீரியா, பாபிலோன், மேதியா-பெர்சியா,கிரேக்கு,ரோமப் பேரரசுகளும் கடைசியாக ஆளப்போகும் அந்தி-கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியமுமாகும். அதன்மேலுள்ள 10 கொம்புகளும் முடியும் அந்தி கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்தோடு இணைந்து அகில உலக அரசாங்கத்தை உருவாக்கும் 10 தேசங்களின் கூட்டமைப்பாகும். அவை, ஜெர்மனி, பிரான்ஸ்,பெல்ஜியம், லக்ஸம்பர்க்,இத்தாலி. கிரீஸ், இங்கிலாந்து,அயர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து என்பவைகள். இதைக் குறித்த விளக்கம் (தானி 7: 23 -24, வெளி 17: 8- 17.)இந்த பகுதிகளிலும் காணலாம். அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்திற்கு வலுசர்ப்பமாகிய சாத்தான் என்னும் பழைய பாம்பானவன் தனது வல்லமையையும் சிங்காசனத்தையும் கொடுத்திருக்கிறான். காரணம், சாத்தான் ஆவியாக இருக்கிறபடியால் நேரடியாகவும், மாம்சமாகவும் இந்த உலகத்தை ஆட்சி செய்ய முடியாது. ஆகவே, மனித ரூபத்தில் மாம்சமாக உள்ள அந்தி கிறிஸ்துவுக்கு தனது சகல அதிகாரத்தையும் கொடுத்து அவன்மூலமாக உலகத்தை ஆட்சி செய்வான். வச 8- 10: இந்த அந்தி கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியம், வெளி 12 ஆம் அதிகாரத்தில் நாம் வாசித்த ‘சபை எடுத்துக்கொள்ளப்படுதல்; சம்பவத்திற்குப் பிறகே ஸ்தாபிக்கப்படும். வச 11- 15: மற்றொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பி வருவதை யோவான் கண்டதாக வாசிக்கிறோம். இந்த மிருகம் கள்ள தீர்க்கதரிசியாவான்.( வெளி 19: 20) ஒரு அரிசி மணி அளவேகொணட மின்னணு சாதனம் (மைக்ரோ ச்சிப்) இந்த இலக்கத்தை தன்னுள் அடக்கி இருக்கும். இது நெற்றியிலோ வலது கையிலோ பொருத்தி விடப்படும். Author: Rev. Dr. R. Samuel
Anti- Christ Rule (First 3 ½ years – Tribulation period)
யோவான் கண்ட இந்த மிருகத்தின் உருவம் சிறுத்தை ,கரடி. சிங்கம் என்ற நான்கு கொடிய மிருகங்களின் அங்கங்களை கொண்டதாக காண்பிக்கப்பட்டது அக்கொடிய மிருகங்களின் பயங்கர குணங்களையும் வீரியத்தையும் பெலத்தையும் பெற்றிருந்த 6 சாம்ராஜ்ஜியங்களின் குணாதிசயங்களை ஒருங்கே இந்த அந்தி கிறிஸ்து உடையவனாயிருப்பான் என்பதை சித்தரிக்கிறது.
வச 4- 7: சாத்தானாகிய வலுசர்ப்பம் கொடுக்கும் வல்லமையை பயன்படுத்தி அந்தி கிறிஸ்து தேவனுடைய இடத்தில் தன்னை உயர்த்துவான். பூமியிலுள்ளவர்கள் அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்தையும் வலுசர்பத்தையும் வணங்குவார்கள். தானி 11: 36- 39 , மத் 4: 8,9. 2 தெச 2: 4- 12, 2 தீமொத் 3: 1, 2.
அந்தி கிறிஸ்துவாகிய இந்த மிருகத்திற்கு 42 மாதங்கள் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக இங்கே வாசிக்கிறோம். அதாவது அந்தி கிறிஸ்துவின் முதல் 3 ½ வருட ஆட்சிகாலத்தை இது குறிக்கிறது. உபத்திரவ காலம் என்றும் இந்த பகுதி அழைக்கப்படும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் மீட்கப்பட்டு, புத்தியுள்ள கன்னிகைகளைப்போல இயேசுவின் வருகைக்கு ஜெயங்கொண்ட கிறிஸ்தவர்களாக ஆயத்தமாக இருந்தவர்களின் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவான் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டு கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். புத்தியில்லாத கன்னிகைகளைப்போல தங்கள் பரிசுத்த வாழ்க்கையை காத்துக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படாமல் அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியில் கைவிடப்பட்டு இருப்பார்கள். இவர்களை அந்தி கிறிஸ்து துன்பப்படுத்துவான். மத் 24: 14, 15 வெளி 12: 17.
ஆனாலும், இந்த காலக் கட்டத்தில் தங்கள்; பரிசுத்தத்தை புதுப்பித்துக்கொண்டு தங்களை காத்துக்கொள்ள விரும்புகிறவர்கள் திடமனதாயிருக்க வேண்டும். துன்பப்படுத்துகிறவன் (அந்தி கிறிஸ்து) துன்பத்தில் அழிவான். லேவி 24: 16,
ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவின் சாயலை அணிந்து வலுசர்பததைப்போல பேசி சாத்தானின்; தன்மையை பெற்றவனாக மற்றவர்களை வஞ்சிப்பான்..அந்திகிறிஸ்துவை வணங்கச்செய்வான். அந்திக்கிறிஸ்துவுக்கு ஒரு சொரூபத்தை செய்விப்பான். இந்த சொரூபம என்பது ஒரு மகாபெரிய பேசக்கூடிய கணி;ணி (ரோபோ கம்ப்யூட்டர்) ஆக இருக்கலாம. உலகத்தில் உள்ள அனைத்துக் குடி மக்களின் எல்லா விவர்களையும் சேகரித்து வைக்கப் பயன் படுத்தப்படும் எனத்தெரிகிறது. இந்த அந்திக்கிறிஸ்துவின் சொரூபத்தை வணங்காதவர்கள் இரத்தசாட்சிகளாக கொல்லப்படுவார்கள். தானி 3: 4- 6
வச 16- 18: கடைசியாக அந்திகிறிஸ்து மனித இலக்கம் கொண்ட 666 என்ற தனது முத்திரையை அமுலுக்குக் கொண்டுவருவான். பூமியின் குடிகள் அனைவரும் கட்டாயமாக இந்த முத்திரையை தங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ள வேண்டும். இந்த முத்திரை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்படும் தனிப்பட்ட இலக்கம் கொண்ட முத்திரையாகும். இந்த இலக்கத்தை வைத்துதான் அனைத்து மக்களும் வாங்குதல் விற்றல் செய்ய முடியும். ஆகவே, இந்த இலக்கம் அந்தி கிறிஸ்துவின் அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒரு மனிதனுடைய வங்கிக் கணக்கின் இலக்கமாகவோ அடையாள இலக்கமாகவோ இருப்பதே சாத்தியமாகக் கருதப்படுகிறது. அந்த இலக்கமானது 666 என்ற எண்ணில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்தின் அடையாள முத்திரை. இதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஒரேவழிதான். இரத்தசாட்சிகளாக மரிப்பதே அந்த வழி.
இப்படிப்பட்ட மைக்ரோ ச்சிப் பொருத்துதல் இப்பொழுதே பல இடங்களில் பற்பலவிதமான உபயோகங்களுக்காக மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் கையாளப்பட்டுவருவதை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். 666 இலக்கத்தில் முடியும் வங்கிக் கணக்கு எண்கள் உலக வங்கிக் கணக்கு (World Bank code no.), ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கு (Australiann National Bank code no) இவற்றில் இப்பொழுது அமுலில் உள்ளது.
இந்தியாவையும் சேர்த்து பல நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது குடிமக்களுக்கு தனிப்பட்ட அடையாள எண்களைக்கொடுத்து அவற்றை ஒரு மத்திய கணிணியில் இணைத்திருக்கிறார்கள்.
‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’
Author: Rev. Dr. R. Samuel