2தெசலோனிக்கேயர் 2:4-12

2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
2:5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா?
2:6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்.
2:7 அக்கிரமத்தοன் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
2:8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.
2:9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,
2:10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும் இரட்சிக்கப்படத்தக்கதாக சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
2:12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.




Related Topics


அவன் , எதிர்த்துநிற்கிறவனாயும் , தேவன் , என்னப்படுவதெதுவோ , ஆராதிக்கப்படுவதெதுவோ , அவையெல்லாவற்றிற்கும் , மேலாகத் , தன்னை , உயர்த்துகிறவனாயும் , தேவனுடைய , ஆலயத்தில் , தேவன்போல , உட்கார்ந்து , தன்னைத்தான் , தேவனென்று , காண்பிக்கிறவனாயும் , இருப்பான் , 2தெசலோனிக்கேயர் 2:4 , 2தெசலோனிக்கேயர் , 2தெசலோனிக்கேயர் IN TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 2 TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் 2 IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 2 4 IN TAMIL , 2தெசலோனிக்கேயர் 2 4 IN TAMIL BIBLE , 2தெசலோனிக்கேயர் 2 IN ENGLISH , TAMIL BIBLE 2Thessalonians 2 , TAMIL BIBLE 2Thessalonians , 2Thessalonians IN TAMIL BIBLE , 2Thessalonians IN TAMIL , 2Thessalonians 2 TAMIL BIBLE , 2Thessalonians 2 IN TAMIL , 2Thessalonians 2 4 IN TAMIL , 2Thessalonians 2 4 IN TAMIL BIBLE . 2Thessalonians 2 IN ENGLISH ,