நீதிமொழிகள் வேத வினா கேள்விகள் 1

  • 1. ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ ____ போலே தைரியமாயிருக்கிறார்கள்.
  • 2. ____ ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.
  • 3. துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ ____ அறிவார்கள்.
  • 4. இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற ____ அவனிலும் வாசி.
  • 5. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய _____ அருவருப்பானது.
  • 6. ஐசுவரியவான் தன் பார்வைக்கு ____; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
  • 7. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ _____ பெறுவான்.
  • 8. தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் _____ பெறுவான்.
  • 9. தன் ____ நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
  • 10. துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ ____ பெருகுகிறார்கள்.