குழப்பம் என்று அழைக்கப்படும் கொரோனா

நோவாவின் பேழையால் வெள்ளத்தில் அவரது குடும்பத்தை காப்பாற்ற முடிந்தால், அவர்கள் ஒரு நகரத்தையும் ஒரு கோபுரத்தையும் கட்டினால் அநேக ஜனங்களை பாதுகாக்கவும் சேர்த்துக் கொள்ள முடியும் என்று நினைத்தார்கள்.  பேழை பல விலங்குகளுக்கு இடமளிக்கும்.  நகரத்தில் கட்டும் கோபுரத்தினால் பெருங்கூட்ட ஜனங்களை சேர்த்துக் கொள்ள முடியும். சிநெயார் நிலம் என்பது பாபிலோனின் மற்றொரு பெயர் (ஆதியாகமம் 10:10). கர்த்தர் பாஷையைத் தாறுமாறாக்கினபடியால் மனித இனம் முற்றிலும் கலகக்காரர்கள் (கிளர்ச்சி) ஆவதைத் தடுத்தது. கோவிட் 19 க்கூட எச்சரிக்கவும், தண்டிக்கவும், மனந்திரும்புவதற்கு மேலும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கவும் தேவன் பயன்படுத்துகிறாரோ? 

இவ்விரண்டுக்கும் ஒற்றுமைகள் பல உள்ளன:

1) பொருளாதார வளம்:

இன்றைய உலகத்தைப் போலவே பாபேலிலும் பொருளாதார வளர்ச்சி இருந்தது என்பது வெளிப்படையாக தெரிகிறது.  அவர்களுக்கு உபரியாக அல்லது செலவீனங்கள் எல்லாம் போக புதிய புதிய திட்டங்களில் வீணாக (மாயை) முதலீடு செய்யுமளவு வருமானம் அவர்களிடம் இருந்தது.

2) தொழில்நுட்ப திறன்:

சூடாக்கின செங்கற்கள் மற்றும் நிலக்கீல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் குறிகாட்டிகளாக இருந்தன, ஏனெனில் நிலக்கீல் நோவா மற்றும் மோசேவின் தாயாரால் தண்ணீரால் பாதிக்காதபடி (நீர்ப் புக விடாத) இருக்க பயன்படுத்தப்பட்டது (ஆதியாகமம் 6:14; யாத்திராகமம் 2: 3). தொழில்நுட்பத் திறன் என்பது ‘தொழில்நுட்ப ஆணவத்திற்கு’ (பெருமை) வழிவகுக்கும். அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கடவுள் போல நம்புவது என்றாகி விடும்.

3) தொடர்பு:

ஆதாம் ஏவாள் என்ற ஒரு  ஜோடியிலிருந்து பரம்பரையாக ஒரு மொழி இருந்தது. தகவல் தொடர்பு தடையற்றதாக, சரியானதாக மற்றும் பணியை முழுமையுடன் அல்லது நேர்த்தியுடன் தங்குதடையின்றி நிறைவேற்ற முடிந்தது. அவர்களை எதுவும் தடுக்க முடியவில்லை.  நவீன டிஜிட்டல் தொடர்பு ஒத்த அணுகலையும், அதை அடைவதையும் மற்றும்  கற்பனையான உலகையும் கணிணி  வழங்குகிறது.

4) அரசியல் பெருமை:

ஒற்றுமை இருந்தது.  இப்போது, ​​கடவுள் விரோத சர்வாதிகாரி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உகந்ததாக இருந்தது.  அவர்கள் எண்ணிக்கையில் பாதுகாப்பு இருப்பதாக கற்பனை செய்ததால் அவர்கள் சிதறடிக்கப்படுவதையோ  பயப்படுவதையோ விரும்பவில்லை.

5) போலி மதம்:

இந்த கலகம் தேவன் கொடுத்த வாக்குத்தத்தமான  பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்பதற்கு எதிரானது (ஆதியாகமம் 9: 1). நிலக்கீலைப் பயன்படுத்துவது அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும் மற்றும் தேவனுடைய வாக்குறுதியை புறக்கணித்ததாகும். வானத்தை எட்டும் வகையில் கோபுரம் கட்டுவது என்பது  அவர்கள் நேரடியாக தெய்வங்களை அடையலாம் என்றும் மற்றும் அவர்களை காண தேவன் இறங்கலாம் என்பதாகும். அவர்களின் உண்மையான நோக்கம் பரலோகத்தை அடைவதாக இருந்தால், அவர்கள் சமவெளியில் அல்ல, மலையின் மீது அல்லவா கட்டியிருக்க வேண்டும்.  இது ஒரு மத சம்பந்தமான  ஏமாற்று வேலையாகும். 

இது இரக்கமுள்ள தண்டனையே தவிர தீர்ப்பல்ல.  மக்கள் மொழி மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்டனர்.  பல்வேறு கலாச்சாரங்களும் நாடுகளும் தோன்றின. கோவிட் 19 தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற கடுமையான மாற்றங்களை கொண்டு வரலாம்.

'பாபேல் கோபுரத்தின்' கலகம் பண்ணும்  மனநிலை என்னிடம் உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்