ஐந்து முட்டாள் கன்னிகைகள், தங்களுடைய மூடத்தனமான எண்ணங்களால், ஆயத்தமின்மையையும் பயனற்ற முயற்சிகளையும் சந்தித்தார்கள் (மத்தேயு 25:1–13). அந்த ஐவரைப் போலவே, பலரும் பல்வேறு காரணங்களால் மூடர்களாக நடந்து கொள்கிறார்கள்.
நவநாகரிகம் (Trendy):
மூடப் பெண்கள் நவநாகரிகமாக, சமகால ஃபேஷனில் இருக்க விரும்பினர். எண்ணெய் கொண்ட ஒரு பானையை எடுத்துச் செல்வது அவர்களுக்கு வெட்கமாகவும், பிறரின் கேலிக்குரியதாகவும் தோன்றியது. பணியின் நோக்கத்தையும் தங்களின் பணி வல்லமையையும் மறந்து, தங்களது தோற்றம், கவர்ச்சி, நவநாகரிகம் ஆகியவற்றைப் பற்றியே அவர்கள் அதிகமாக நினைத்தனர்.
சோம்பேறித்தனம் (Lazy):
சில சோம்பேறிகள்; அவர்கள் கனமான சுமைகளைச் சுமப்பதை விரும்பமாட்டார்கள். எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணில் அவர்கள் எண்ணெய் கலசத்தை எடுத்துச் செல்லாமல் விட முடிவு செய்திருக்கலாம். சோம்பேறித்தனம் என்பது பொறுப்புணர்வுக்கான மிகப் பெரிய எதிரி. நல்ல பொறுப்பாளர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவார்கள், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகளில் குறிக்கோளுடன் ஈடுபட்டு வேலையில் மும்முரமாக (பிஸியாக) இருப்பார்கள்.
அறிவு குறைவு (Less knowledge):
திருமண நிகழ்வின் நடைமுறை, கன்னியர்கள் அங்கு இருப்பதின் முக்கியத்துவம், மணமகன் வருவதற்கான தேவையான ஆயத்தம் ஆகியவற்றை அவர்கள் ஒருவேளை புரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அது ஒரு பிக்னிக் அல்லது சுற்றுலா போல் தோன்றியதால், எந்த ஆயத்தமும் செய்யப்படவில்லை.
உற்சாகமின்மை / அலட்சியம் (Lethargic):
நிகழ்வின் நோக்கமும் அதின் அர்த்தமும் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றிய அவர்களின் அணுகுமுறை அலட்சியமானது. அவர்கள் வேறு விஷயங்களில் வீண் அலுவலாக இருந்ததால், இந்த ஆயத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. முன்னுரிமைகளையும் சரியான மதிப்புகளையும் அறிவது என்பது திறமை; அது இல்லையெனில், ஒரு சீஷன் நல்ல சீஷராக இருக்க முடியாது (மத்தேயு 6:33).
ஜுகாட் (Jugaad):
இந்திய கலாச்சாரத்தில் ஜுகாட் என்ற ஒரு சொல் உள்ளது. அது கடைசி நேரத்தில் புதுமையான ஒரு வழியைப் பயன்படுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதைக் குறிக்கும். ஆனால் அந்தப் புதுமையான வழி எப்பொழுதும் சரியானதோ, சட்டபூர்வமானதோ, நிலையானதோ ஆகாது. வெற்றிகளைவிட தோல்விகள் அதிகமானவையாக இருக்கும்.
தவறான எண்ணம் (Wrong thought):
அந்தப் புத்தியில்லாத கன்னிப்பெண்கள், மற்ற ஐந்து கன்னியர்கள் இவ்வளவு பெரிய ஆயத்தம் செய்ததால், அவர்களை மூடர்கள் என்று மனதில் நினைத்திருக்கலாம். மூடர்கள் தாங்களே புத்திசாலிகள் என்று நினைப்பவர்கள் (நீதிமொழிகள் 12:15).
அதிகமும் பற்றாக்குறையும் (Surplus and Scarcity):
அதிகம் உள்ளதைச் சமாளிப்பது, பற்றாக்குறையைச் சமாளிப்பதைவிட எளிதானது. தேவையான அளவு எண்ணெயை எடுத்துச் செல்லாமல், கூடுதலாக இருந்த எண்ணெயை விட்டுவிடவோ, கொடுத்துவிடவோ செய்வது அவர்களுக்கு எளிதானதாக இருந்தது.
மூடர்கள் அழிவார்கள் (Fools perish):
சிலர் சிலுவையின் சுவிசேஷச் செய்தியை மூடத்தனமாகக் கருதுகிறார்கள்; அப்படிச் செயல்படும் அவர்கள் தங்களது மூடத்தனத்திலேயே அழிந்து போவார்கள் (1 கொரிந்தியர் 1:18).
நான் அவருடைய வார்த்தையிலிருந்து ஞானத்தைத் தேடுகிறேனா அல்லது இந்த உலகத்தின் மூடத்தனத்தைப் பின்பற்றுகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran