அறிவால் போஷியுங்கள்

எல்லா மனிதர்களும் ஒரு மேய்ப்பரின் பாத்திரத்தை வகிக்கிறார்கள். பெற்றோர்களாக, குழந்தைகளை மேய்த்தல்; பணியிடத்தில், வேலை செய்பவர்களை மேய்த்தல்; தலைவர்கள் பின்தொடர்பவர்களை மேய்த்தல்... என இதுபோன்று தொடர்கிறது. எனினும், நல்லதும் அறிவுள்ளதும் ஆன மேய்ப்பர்கள் எப்போதும் குறைவாகவே இருப்பார்கள். இஸ்ரவேல் தேசமும் அறிவுள்ள தலைவர்களை இழந்திருந்தது. எனவே, தேவன் வாக்குறுதி அளித்தார்; "உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்” (எரேமியா 3:15).

கற்பித்தல் (Teach):
தெய்வீக மேய்ப்பர்கள் சத்தியத்தை, தேவனின் வார்த்தையை கற்பிப்பார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படுக்கைக்கு செல்லும் போதும், உட்காரும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும் தேவ நியமனங்களைக் கற்பிக்க வேண்டும் (உபாகமம் 6:6-8). தேவனுடைய வார்த்தையானது முறைசாராமல் (அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் - Informally), தன்னியல்பாக (Non-formally), மற்றும் முறையான (பாடத்திட்டம் போன்று - Formally) வழிகளில் கற்பிக்கப்பட வேண்டும்.‌ பஸ்கா கொண்டாடப்படும்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முறைசாரா முறையில் கற்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே செய்தியை பல வடிவங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட வேண்டும். சத்தியத்தை மனப்பாடம் செய்யலாம், பாடலாகப் பாடலாம், தியானிக்கலாம், குறித்துக்கொள்ளலாம், நடைமுறை வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்தலாம்.

பயிற்சி (Train):
கற்பித்தல் என்பது வேதத்தின் உண்மைகளால் மனதை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் மனம் புதுப்பிக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட மனம் கொண்ட ஒருவர் உலகின் போக்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்ற மாட்டார், ஆனால் வேதாகம உலகக் கண்ணோட்டத்துடன் மாற்றப்பட்ட தேவ மனிதராக இருப்பார். மனதிற்கு பயிற்சி தேவை. பெரும்பாலான நேரங்களில், மனம் உலகின் கருத்துக்கள், கலாச்சாரம் மற்றும் ஊடக செல்வாக்குடன் நிரம்பியிருக்கும். எனவே, இது ஒரு ஸ்மார்ட்போன் போல, நினைவகம் நிரம்பியுள்ளது. வேதத்திற்கு முரணான தினசரி கருத்துக்கள், கண்ணோட்டங்கள், யோசனைகள் மற்றும் எண்ணங்கள் நீக்கப்பட வேண்டும், அதற்குப் பதிலாக வேதாகம சத்தியத்தால் நிரப்பப்பட வேண்டும். அத்தகைய ஒருவரால் மட்டுமே தேவனின் நல்ல, இனிமையான மற்றும் பரிபூரண சித்தத்தை அறிய முடியும் (ரோமர் 12:1-2).

பராமரித்தல் (Feed):  
தேவபக்தியுள்ள மேய்ப்பர்கள் மந்தையை அன்பு, பணிவு, அக்கறை மற்றும் பகிர்வு ஆகியவற்றால் மேய்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, உலகப்பிரகாரமான மேய்ப்பர்கள் மக்களை பெருமை, வெறுப்பு மற்றும் மேட்டிமை போன்ற மனப்பான்மையால் நிரப்புகிறார்கள்.  தேவபக்தியுள்ள மேய்ப்பர்கள் இருக்கும் இடத்தில், சமாதானம், நோக்கம், அர்த்தம் மற்றும் சொந்தம் என்ற உணர்வு இருக்கும்.  

தலைமை (Lead):  
தேவபக்தியுள்ள மேய்ப்பர்கள் ஆடுகளை அமைதியான நீர்நிலைகள், பச்சை மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீதியான பாதையில் வழிநடத்துகிறார்கள்.  நீதியான பாதை மட்டுமே தேவன் தீர்மானித்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறது.  பல பாதைகள் நல்லதாகத் தோன்றினாலும், அவை மரணத்திற்கு நேராக அழைத்துச் செல்கின்றன (நீதிமொழிகள் 14:12). 

நான் தேவனுடைய இருதயத்துடன் கூடிய மேய்ப்பனாக இருக்கிறேனா? 
 

Rev. Dr. J.N. Manokaran