2நாளாகமம் 29:11 (எசேக்கியா) என் குமாரரே, இப்பொழுது அசதியா யிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டு கிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றார்.
1. அளிக்கப்பட்ட ஊழியத்தில் ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். எரேமியா 48:10 கர்த்தருடைய வேலையை அசதியாய் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். நீதிமொழிகள் 18:9 அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன் நீதிமொழிகள் 19:15 அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
2. அளிக்கப்பட்ட வரத்தில் 1தீமோத்தேயு 4:14 (12-16) மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கத்தரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் பற்றி அசதியாயிராதே. 2தீமோத்தேயு 1:6 நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 1கொரிந்தியர் 1:7 நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக் கிறீர்கள். 1பேதுரு 4:10
3. அளிக்கப்பட்ட தேசத்தில் யோசுவா 18:3 யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக் களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித் துக்கொள்ளபோகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள். சங்கீதம் 37:9 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் சுதந்தரிப்பார்கள் சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள் சங்கீதம் 37:22 ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரிப்... சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள். சங்கீதம் 37:34 காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
Author: Rev. M. Arul Doss