ஒரு இளைஞன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷனாக ஆனான். பின்னர், தேவன் தன்னை ஊழியத்திற்காக அழைக்கிறார் என்று உணர்ந்ததால், அவன் வேதாகம கல்லூரியில் சேர்ந்தான். ஆனால், அவனுக்கு அங்குள்ள பணிகள், தேர்வுகள் மற்றும் கல்வி ஒழுங்குகள் பிடிக்கவில்லை. ஆகையால், அவன் அங்கிருந்து ஓடிப்போய் விட்டான், பின்பதாக ஒரு துறைமுகத்தில் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினான். கனமான சுமைகளைத் தூக்கி, கடின உழைப்பைச் சகித்து, கொசுக்களால் ஏற்பட்ட பாடு என அனுபவித்த போது அவன் தீர்க்கதரிசி யோனாவை நினைத்தான். பின்னர் வேதாகம கல்லூரிக்குத் திரும்பி, தன் படிப்பை முடித்து, ஊழியத்தில் ஈடுபட்டான். கர்த்தர் இரண்டு மகன்களின் உவமையைப் போதித்தார் (மத்தேயு 21:28–32). இருவரும் சிறப்பானவர்களாக இருந்தார்கள்; ஆனால் ஒருவன் நீதிமானானான், மற்றொருவன் கலகம் செய்பவன் ஆனான்.
முயற்சி:
இரு மகன்களும் ஒரே வீட்டில் வசித்தார்கள். வீட்டின் அன்றாட வேலைகளில் பங்கேற்பது அவர்களது கடமை. ஆனால் அவர்கள் தங்களாகவே இருக்க விரும்பினார்கள். அதற்கிடையில், தந்தை தான் முன் முயற்சி செய்து, இருவரையும் அணுகி, அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
திசைநோக்கு:
தந்தை இரு மகன்களிடமும் சென்று ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்; “மகனே, இன்று என் திராட்சத்தோட்டத்தில் சென்று வேலை செய்”. முதலில், இது உறவு பற்றியது; அதில் சிறப்புரிமைகளும் பொறுப்புகளும் இணைந்து கொண்டாடப்பட வேண்டியவை. இரண்டாவது, தந்தை ஒப்படைக்கும் பணியை, அல்லது தூது வேலை அல்லது செயலை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். மூன்றாவது, மகன்கள் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த முறையில் உழைக்கும் நம்பிக்கைக்குரிய உக்கிரணக்காரர்களாக இருக்க வேண்டும். நான்காவது, அந்தத் திராட்சத்தோட்டம் தந்தைக்குச் சொந்தமானது.
தாமதமான கீழ்ப்படிதல்:
முதலாவது மகன் எதிர்த்துப் பேசி, வேலை செய்ய விரும்பவில்லை. ஆனால் பின்னர் மனந்திரும்பி சென்று வேலை முடித்தான். தன்னிச்சையான உடனடி கீழ்ப்படிதல் சிறந்தது. இருப்பினும், தாமதமான கீழ்ப்படிதல், கீழ்ப்படியாமையைக் காட்டிலும் பெரியது.
பாசாங்கான கீழ்ப்படிதல்:
இரண்டாவது மகன் “செல்வேன்” என்று சொன்னான், ஆனால் போகவில்லை. வெளிப்படையாக அவன் கீழ்ப்படிந்தது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் எதிர்ப்பு இருந்தது. உண்மையில் செல்லும் எண்ணமே அவனுக்கு இல்லாது, பொய்யான வாக்குறுதி மட்டும் கொடுத்தான்.
பிதாவின் சித்தம்:
முதலாவது மகன், சமுதாயத்திலிருந்து மத தலைவர்கள் வெளியேற்றிய பாவிகள், சாதாரண மக்கள் அல்லது வேசிகள் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டான். தாமதமாக இருந்தாலும் கீழ்ப்படிபவர்கள், ஒருபோதும் கீழ்ப்படியாதவர்களை விட தேவ ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். யோனாவைப் போல ஓடிப்போன அந்த இளைஞனும், பின்னர் மனந்திரும்பி, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினான்.
நான் தன்னிச்சையாகக் கீழ்ப்படிகிறேனா, அல்லது கீழ்ப்படிவதைத் தாமதப்படுத்துகிறேனா அல்லது கீழ்ப்படியாமல் போகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran