தம் மக்களைப் பொறுப்பற்ற முறையில் வழிநடத்திய இஸ்ரவேலின் தலைவர்களைக் கண்டித்து எரேமியா தீர்க்கதரிசி மூலம் கர்த்தர் பேசினார் (எரேமியா 23:32). பொறுப்பற்ற தன்மை என்பது சரியான எச்சரிக்கையின்றி நடந்துகொள்வது, விளைவுகளைப் பற்றி அலட்சியமாக இருப்பது, நிருவிசாரமாக இருப்பது, அவசரப்படுவது, காட்டுத்தனமாக இருப்பது மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலைகள் எனப்போன்று வரையறுக்கப்படுகிறது. பொறுப்பற்ற தலைமை அவநம்பிக்கை, துயரம், நிலையற்ற சூழ்நிலைகள் மற்றும் ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும். பொதுவாக, பொறுப்பற்ற தலைவர்கள் பெருமையுள்ளவர்களாகவும், போர்க்குணம் கொண்டவர்களாகவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், ஆணையிடுபவர்களாகவும் மற்றும் விளைவுகளைப் புறக்கணிக்க விரும்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இத்தகைய பொறுப்பற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவால் அதிக முன்னேற்றம் அடைய முடியாது.
பொறுமையின்மை:
நகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில், பொறுமையற்ற பொறுப்பற்ற ஓட்டுநரைப் பார்ப்பது பொதுவானது விஷயம். அவர்கள் ஹாரன் அடிப்பது, நேரான பாதைகளை மாற்றி குறுக்கு பாதையில் போவது, சிக்னல்களைத் தாண்டுவது மற்றும் பிற வாகனங்களை ஆபத்தான முறையில் முந்திச் செல்வது என இருப்பார்கள். பொறுப்பற்ற தலைவர்கள் விதிகளைக் கடைப்பிடிப்பதைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளை வைத்து நம்மால் கண்டறிய முடியும். அத்தகைய தலைவர்கள் அடைய முடியாத இலக்குகளை நிர்ணயித்து, எகிப்தில் எப்படி அடிமைத்தனமான வேலை நடந்ததோ அது போல தங்கள் மக்களை இலக்கை அடையத் தூண்டுவார்கள் (யாத்திராகமம் 1:14). பொறுப்பற்ற தலைவர்கள் தங்களைப் பின்தொடர்பவர்களின் இருதயங்களைக் கசப்பானதாக மாற்றி விடுகிறார்கள்.
சுயநலம்:
பொறுப்பற்ற தலைவர்களும் சுயநலவாதிகள், மேலும் அவர்களின் கௌரவம், சலுகைகள், முன்னுரிமைகள் மற்றும் அதிகாரத்தை அதிகரிக்க வழிகளைத் தேடுவார்கள். வெற்றிக்கான பாதையில், அவர்கள் மக்கள் மீது நடந்து சென்று, பல உயிரிழப்புகளை உருவாக்க முடியும். தாவீது ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பை உத்தரவிட்டார், அதை அவரது இராணுவத் தளபதி யோவாப் எதிர்த்தார். இதன் விளைவாக 70000 பேர் இறந்தனர் (2 சாமுவேல் 24).
செயல்திறன்:
பொறுப்பற்ற தலைவர்கள் பகுத்தறிந்து திட்டமிடுவதில்லை. அவர்கள் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில்லை. எனவே, அவர்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் முற்போக்கான வேலைகளுக்குப் பதிலாக பற்றியெரியும் அக்கினியை அணைக்கும் வேலையைச் செய்கிறார்கள்.
குறுகிய கால கண்ணோட்டம்:
உடனடி ஆதாயங்கள் நீண்டகால இலக்குகளுக்கும் வெற்றிகளுக்கும் எதிரியாக இருக்கலாம். நீண்டகால முதற்பேறான ஆசீர்வாத உரிமைகளை விட, பசியிலிருந்து உடனடி நிவாரணம் தேவை என்பதே ஏசாவுக்கு ஆர்வமாக இருந்தது (ஆதியாகமம் 25:29-34).
வீணான மற்றும் மாயையான திட்டங்கள்:
பொறுப்பற்ற தலைவர்கள் பயனற்ற திட்டங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். நோக்கமின்றி, அவர்கள் தங்கள் பின்பற்றுபவர்களுக்கும் அமைப்புக்கும் நீண்டகால சிக்கல்களை உருவாக்கும் திட்டங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மோசே மூலம் வரும் தேவ வார்த்தைக்காகக் காத்திருக்காமல் ஆரோன் வழிபாட்டைத் தொடங்கினான். வார்த்தை இல்லாத ஆராதனை புறமத வழிபாடாக மாறக்கூடும் (யாத்திராகமம் 32:1-4).
நெறிமுறைகளை மீறுதல்:
நாதாபும் அபியூவும் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை, அவர்களின் தவறினால் பலிகளைச் செலுத்தும்போது இறந்தனர். மோசே கற்பித்த வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை அவர்கள் அறிந்திருந்தனர், மேலும் அவர்களின் தகப்பனாகிய ஆரோனும் முன்மாதிரியாக இருந்துக் காண்பித்திருந்தாரே (லேவியராகமம் 10:1).
நான் ஒரு பொறுப்பற்ற நபரா அல்லது நல் சிரத்தையுள்ள சீஷனா?
Rev. Dr. J.N. Manokaran