விதி அவனை அனாதையாக்கியதா?

ஒரு பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டது, அதில் பெற்றோர் இருவரும் இறந்தனர், அதிசயமாக அவர்களின் ஒரு வயது சிறுவன் மட்டும் உயிருடன் இருந்தான். அந்த விபத்தைக் கண்ட பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்; இந்த குழந்தை ஒரு சனியன், இவன் பிறந்து பெற்றோரை விழுங்கி விட்டான், அதிலும் ஒருவர் ஒருவேளை இவன் பெற்றோர் தீய செயல்கள் செய்திருக்கலாம்; அதுதான் குழந்தைக்கு இந்த நிலை. இன்னொருவர் கூறினார்; முந்தைய பிறவிகளின் பாவத்தின் காரணமாக இந்த சிறுவன் துன்பப்படுவதற்கு மறுபிறவி எடுத்தான்.  இப்படியாக அவநம்பிக்கையின் குரல்களும், நியாயமற்ற காரணங்களும் அக்குழந்தையைச் சுற்றிலும்  ஒலித்தன. அக்கூட்டத்தில் இருந்த ஒரு சமூக சேவகர், எல்லாரையும் பார்த்து; “உயிருடன் இருப்பவர்களின் குணத்தை சோதிக்க இந்தக் குழந்தை உயிருடன் இருக்கிறது.  இப்போது உங்களில் யாராவது இந்தக் குழந்தையை நேசிப்பார்களா?  அல்லது இந்த குழந்தையை வெறுக்கிறீர்களா?  உங்கள் குடும்பத்தில் தத்தெடுத்து வளர்க்க யாராவது தயாராக உள்ளீர்களா?  இந்த குழந்தை தனது பெற்றோரின் அன்பு, கவனிப்பு மற்றும் வளர்ப்பைப் பெற முடியுமா?" என்றார். கூட்டத்தினரிடையே முழு அமைதி நிலவியது.

கற்பனைமாடம்:
பல கோட்பாடுகள், கட்டுக்கதைகள், கருத்துக்கள் உள்ளன, அவையாவும் யூகங்களே.  உண்மையான காரணம் இல்லை.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் கூட கலாச்சார விழுமியங்களால் ஈர்க்கப்பட்டனர்.  ஒருவன் குருடனாகப் பிறக்கக் காரணம் அவன் அல்லது அவனது பெற்றோரின் பாவமாக இருக்குமோ என்று எண்ணினர் (யோவான் 9:2). 

 தீர்ப்பு:
 இத்தகைய துன்பத்திற்கான சூழல், காரணங்களைத் தங்களுக்கு நிச்சயமாகத் தெரியும் என்பது மக்களின் அணுகுமுறை.  எனவே, அவர்கள் தங்கள் மதக் கருத்துக்களை தெரிவித்தனர்.

 தர்க்கமற்றது:
 ஒரு சிறு பையன் எப்படி தண்டிக்கப்பட முடியும், அவனுக்கு பாவத்தைப் பற்றி என்ன தெரியும்?  அதை அறியவோ புரிந்துகொள்ளவோ ​​முடியாதளவு அவன் ஒரு வயது குழந்தை.  பிறவிச் சுழற்சிக்கு ஆதாரம் இல்லாத போது, ​​பூர்வ பாவங்களுக்கு ஆதாரம் எங்கே?  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரை எப்படி தண்டிக்க முடியும்?

 தண்டனை:
 எல்லாவிதமான துன்பங்களும் பாவத்தின் தண்டனை அல்லது விதி என்று சிலர் புரிந்துகொள்கிறார்கள்.  யோபின் துன்பம் அவருடைய பாவத்துடன் இணைக்கப்படவில்லை, உண்மையில், தேவன் அவரை நீதிமான் என்று அறிவிக்கிறார்.  ஆக துன்பம் பொன்னாக விளங்குவதற்கான சோதனை (யோபின் நம்பிக்கைக்கான தேர்வு) என்பதாக தேவனால் பயன்படுத்தப்பட்டது.

 மனந்திரும்ப அழைப்பு:
 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலோவாம் கோபுரத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்ட சோகத்தைப் பற்றி விவாதிக்கவோ அல்லது கருத்துக் கூறவோ மறுத்துவிட்டார்.  மாறாக, உயிருடன் இருப்பவர்களும் அத்தகைய பேரழிவுகளைப் பற்றி அறிந்தவர்களும் மனந்திரும்ப வேண்டும் அல்லது அத்தகைய பாதிக்கப்பட்டவர்களைப் போல அழிந்து போக வேண்டியிருக்கும் என்று அவர் கோரினார்  (லூக்கா 13:1-5).

 நான் ஊகிக்கிறேனா அல்லது மனந்திரும்புகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more