ஏழையாக இருத்தல்


“நரகத்தில் உள்ள பணக்காரனைப் போலத் தண்ணீர் கேட்டுக் கொண்டு வேண்டிக்கொள்வதைவிட, பூமியில் லாசரு போல அன்றாட அப்பத்திற்காக வேண்டிக்கொள்வதையே நான் விரும்புகிறேன்” டி. எல். மூடி. 

உவமை:
பணக்காரன், தனது வீட்டுவாசலில் படுத்திருந்த ஏழை லாசருவின் இருப்பையும் அவல நிலையும் உணராமல், செழுமையாக இருந்தான். அவன் தினமும் சொகுசான உணவுகளை உண்டான். ஆனால் லாசரு, உணவுக்காக ஏங்கிக் கொண்டிருந்தான்; பல நாட்களில் உணவின்றியும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருவரும் இறந்தனர். லாசருவை தேவதூதர்கள் விண்ணகத்திற்குக் கொண்டு சென்றனர். பணக்காரனுக்கு அரசு மரியாதையுடன் 21 தோட்டாக்கள் முழங்க அரசு வணக்க மரியாதையுடன் அஞ்சலி நடைபெற்றது. ஆனால், இறுதியில் அவன் நரகத்திற்கு சென்றடைந்தான். அங்கிருந்து அவன் லாசருவை பார்த்தான்; அவனை அறிந்துகொண்டான்; அவன் ஆபிரகாமுடன் இருப்பதை புரிந்துகொண்டான். அவன் விரல் நுனியில் இருந்து தண்ணீரை தன் வறண்ட நாக்கில் சொட்ட அனுமதிக்குமாறு ஆபிரகாமிடம் கெஞ்சினான். ஆபிரகாம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தார் (லூக்கா 16:19–31).

எதில் ஏழை?:
லாசரு பொருளாதார ரீதியில் ஏழையாக இருந்தான். முதலில், அவனிடம் வீடும் நிலமும் இல்லை. இரண்டாவதாக, அவனுக்கு வேலை செய்யத் தேவையான திறமைகள் இல்லாவிட்டாலும் அல்லது திறன் இருந்தாலும் கூட வேலைவாய்ப்புகளும் அதற்கு தேவைப்படும் பொருளாதார இயலாமையின் காரணமாக கூட வேலை செய்ய முடியவில்லை. மூன்றாவதாக, அவனிடம் உணவு வாங்கத் தேவையான பணமும் இல்லாமல், பணக்காரனின் இரக்கத்தையே நம்பி வாழ்ந்தான். அதனால், இந்த உலகில் பிழைத்துக் கொள்ள அவன் பிச்சை கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்.

எதில் பணக்காரன்?:
அந்த மனிதன் பொருளாதார ரீதியாக பரிபூரணமாகவும் கூடுதலாகவும் வசதிகளை கொண்டவனாக இருந்தான். முதலில், அவனிடம் பல அறைகள் கொண்ட விசாலமான வீடு இருந்தது. இரண்டாவதாக, அவனுக்கு வருமானம் தரும் சொத்துகள் இருந்தன. மூன்றாவதாக, உணவில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்  இருந்தது.
நான்காவதாக, அவன் மதிப்பிற்குரிய குடிமகன் அல்லது அதிகாரம் கொண்ட ஒருவனாக இருந்திருக்கலாம்.

உண்மையான செல்வம்:
ஏழையான லாசருவிடம் உண்மையான செல்வம் இருந்தது. முதலில், அவன் தேவனுடன் சரியான உறவை கொண்டிருந்தான். இரண்டாவதாக, அவன் திருப்தியுடன் இருந்தான்; அவனது விசுவாசத்தின் அடிப்படையில் அவனது தெய்வபக்தி ஒரு பெரிய லாபமாகும் (1 தீமோத்தேயு 6:6). மூன்றாவதாக, அவன் நித்தியத்தை நோக்கிய கண்ணோட்டத்துடன் வாழ்ந்தான்; அவனது வாழ்க்கை இந்த உலகத்திலேயே முடிவடைந்தது அல்ல. அதனால், பணம் ஈட்ட வஞ்சக வழிகளிலும், கொள்ளை, வன்முறை போன்ற பாவங்களில் ஈடுபடவில்லை. நான்காவதாக, அவன் வைத்திருந்த நித்திய ஜீவன் பற்றிய நம்பிக்கை நிறைவேறியது, தேவதூதர்கள் அவனை விண்ணகத்திற்குக் கொண்டு சென்றபோது அந்நம்பிக்கை நிறைவேறியது. ஐந்தாவது, லாசருவுக்கு இரட்சகரால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நித்திய வீடு இருந்தது (யோவான் 14:1).

என்னிடம் இருப்பது உண்மையான செல்வங்களா? 

Rev. Dr. J.N. Manokaran