சில பிரபலங்கள் தாங்கள் முதுமையைத் தடுக்கும் சிகிச்சை எடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். 50 வயதைத் தாண்டியவர்கள் சிலர், தாங்கள் மீண்டும் 25 வயது தோற்றத்துக்கு வந்துவிட்டோம் என்று தெரிவித்தனர். இப்படியான முன்னேற்றத்தால் மனிதன் இறப்பதில்லை என்று சிலர் ஊகித்தனர். ஆனால் 42 வயதான ஒரு நடிகை மாரடைப்பால் மரணமடைந்தார்; அவர் கடந்த 5–6 ஆண்டுகளாக முதுமைத் தடுக்கும் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது கணவர் தெரிவித்தார் (என்டிடிவி, ஜூன் 28, 2025). வருத்தம் என்னவென்றால், இத்தகையவர்கள் வேதாகம உண்மையை அறியவில்லை.
மனிதர்கள் விசேஷமானவர்கள்:
தம்முடைய வார்த்தையால் தேவன் எதுவுமில்லாத இடத்திலிருந்து உலகை படைத்தார் (ஆதியாகமம் 1). ஆனால், ஆதாமை தேவன் மண்ணிலிருந்து உருவாக்கி, அவன் நாசியில் ஜீவனுள்ள சுவாசத்தை ஊதினார் (ஆதியாகமம் 2:7). மனிதர்கள் வெறும் உடல்களல்ல; சிறப்பு உணவு சாப்பிடுவது அல்லது மருந்துகள் எடுப்பதன் மூலம் சரீர முதிர்ச்சியை தடுக்க முடியாது. மனிதன் ஆவிக்குரிய சுபாவத்தோடு படைக்கப்பட்டவன்; நித்தியத்தைக் கண்டுபிடிக்கிற ஆர்வம் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் உள்ளது (பிரசங்கி 3:11).
மரணம்:
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, ஜீவனுள்ள தேவனிடமிருந்து பிரிந்து ஆவிக்குரிய மரணத்தை அனுபவித்தனர். பெண்ணின் சந்ததியிலிருந்து ஒரு இரட்சகரை அனுப்புவதாக வாக்குத்தத்தம் செய்து, தேவன் ஒரு மிருகத்தை பலியிட்டு, தோல் உடையால் அவர்களை ஆடையிட்டார் (ஆதியாகமம் 3:15). பவுல் கூறுவது போல் பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம் (1 கொரிந்தியர் 15:26). ஆகும்.
ஆவிக்குரிய மறுபிறப்பு:
மனிதனின் உண்மையான தேடல், முதுமையைத் தடுக்கும் சிகிச்சை மூலம் நீண்ட ஆயுள் பெறுவதல்ல; ஆவிக்குரிய மறுபிறப்பே ஆகும். தமது பாவங்களை விட்டு மனந்திரும்பி, ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் மூலம் புதிய ஜீவனைப் பெற அனைவரும் அழைக்கப்படுகின்றனர் (யோவான் 1:12). இந்த ஆவிக்குரிய மறுபிறப்பு இல்லாமல், அனைவரும் நித்திய வேதனை, துன்பம், வலி நிறைந்த அக்கினிக் குளமான நரகத்தில் நடைபெறும் இரண்டாம் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்.
நியாயத்தீர்ப்பை தவிர்க்க முடியாது:
சிலர், மரிக்காமல் இருந்தால் தேவனைச் சந்திக்காமல், அவரிடம் கணக்கொடுக்காமல், தேவனின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற முட்டாள் எண்ணத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அனைத்து மனிதரும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதே; இதற்கு வேறு வழியில்லை (எபிரெயர் 9:27).
நோக்கம்:
மனிதனுடைய வாழ்க்கையின் நோக்கம் தேவனின் ஆசையின்படி செயல்பட்டு, அவருக்கு மகிமையை கொடுக்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கென தனித்துவமான வாழ்க்கை நோக்கத்தை உருவாக்கி அதனை பின்பற்றுகின்றனர். அது தேவனின் ஆசைக்கு ஒத்துப்போகவில்லை என்றால், அந்த எல்லா திட்டங்களும் நாசமாகிவிடும்.
நான் தேவனின் நோக்கத்தை நிறைவேற்றுகிறேனா, அவர் நியமித்த ஆயுட்காலத்தில் திருப்தி அடைகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran