2. ஏழைச் சகோதரனுக்கு உதவாமல் இருந்தால் பாவம் உபாகமம் 15:9(1-14) உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படி செய்வாயானால் அது உனக்கு பாவமாயிருக்கும். நீதிமொழிகள் 19:17; சங்கீதம் 82:3
3. ஏழைக் கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறந்தால் பாவம் உபாகமம் 24:14-15 அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுது போகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட் டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். மத்தேயு 20:4,8
4. மக்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் பாவம் 1சாமுவேல் 12:23(16-25) நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப் பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். எஸ்தர் 4:8; 1தெசலோனிக்கேயர் 1:4