மேசியாவிற்கு சான்றிதழா?

அநேக ஜனங்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக் கொண்டு அவரைப் பின்பற்றுபவர்களாக மாறுவதைப் பற்றி பலரால் பேசப்படுகிறது. சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ இதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். அதனால் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன, மக்கள் கைது செய்யப்படுகிறார்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் சபைகள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்படுகின்றன.  இவ்விஷயத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால்:  யார் இந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து?  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் ஊழியம் செய்தபோதும் இதே இக்கட்டான நிலை இருந்தது.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கைது செய்ய மதத் தலைவர்கள் சேவகர்களை அனுப்பினார்கள்.  அவரை கைது செய்யாமல் அவர்கள் திரும்பி வந்தனர்.  என்னவென்று கேட்டபோது, ​​இந்த "சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்" (யோவான் 7:46). யூத மதத்தின் தலைவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதற்கு அவர்கள் மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள். "அப்பொழுது பரிசேயர் நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?" (யோவான் 7:47-48). 

1) வஞ்சிக்கப்பட்டனரா?:
முதலாவதாக, மக்கள் அல்லது சாமானியர்கள் அல்லது ஆவிக்குரிய பயிற்சி பெறாதவர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் உண்மை எது என்று தீர்மானிக்கும் பொது அறிவு ஏழை அல்லது சாமானியர்களுக்கு இல்லை என்று ஒருவர் கூறினால் அது படைத்தவரை அவமதிப்பது போலாகும். தேவன் மனிதர்களைப் படைத்துள்ளார், அவர்களின் சமூக அந்தஸ்து அல்லது கல்வி நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்கள்.

2) அரசு ஒப்புதல் இல்லை:
இரண்டாவதாக, அதிகாரிகள் யாரும் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை.  அரசாங்க அங்கீகாரமோ அல்லது அரசியல் சம்மதமோ இல்லாமல் மேசியா பூமியில் தோன்ற முடியாது.  அரசியல் ஆணவம், மேசியாவை அங்கீகரிக்கவோ அல்லது ஏற்கவோ தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்க வைக்கிறது.  இன்றும் கூட, பல அரசியல் ஆட்சியாளர்கள் எது ஆன்மீகம் அல்லது எது சத்தியம் என்பதை தங்களால் தான் கட்டளையிட முடியும் என்று நினைக்கிறார்கள்?

3) மத அங்கீகாரம் இல்லை:
மூன்றாவதாக, மேசியா யார் என்பதைத் தீர்மானிக்க அல்லது பகுத்தறிய அல்லது முடிவெடுக்க தங்களுக்கு அறிவும் புரிதலும் இருப்பதாக மத அதிகாரிகள் நினைத்தார்கள்.  இன்றும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் சத்தியத்தை வழங்குவதற்காக மத கட்டமைப்புகள், அரசியல் அமைப்புகள் மற்றும் அறிவு ஜீவிகளைத் தேடுகிறார்கள்.

4) சாட்சிகள்:
யோவான் ஸ்நானகன் சாட்சியாக இருந்தார், மற்ற சீஷர்களும் இருந்தனர்; இன்று விசுவாசிகளும் இருக்கின்றனர். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார் (யோவான் 1:7; 14:6). 

நான் அவருக்கு சாட்சியுள்ளவனாக/ சாட்சியுள்ளவளாக இருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more