நீ யாரு? நான் யாரு?
இந்த கேள்விக்கு பதில் கூறு!
பதில் இல்லா கேள்வி ஏது!
உன்னை படைத்த தேவனிடம் விடை தேடு
வாழ்க்கை ஓர் முறைதான்
நோக்கம் அறிந்திடுவாய்
தேவன் நம்மை தம் சாயலாய் சிருஷ்டித்தார்!
அவர் சுவாசம் கொண்டு நம்மில் ஜீவனை தந்திட்டார்!
தேவ மகிமையை நாம் இழந்ததால்
தம் மகிமையை அவர் துறந்தாரே!
பாவ சேற்றினில் நாம் வீழ்ந்ததால்
நக்காகவே பாவமானரே!
பாவம் உணர்ந்து நாம் தேவனை சந்தித்தால்!
நம்மை ஏற்றுக் கொண்டு நம் பாவத்தை மன்னிப்பார்!
அவர் சிலுவையில் தந்த குருதியே
புது வாழ்க்கையின் நல் உறுதியே!
விசுவாசத்தில் நாம் வளர்வதே
அவர் கேட்டிடும் வாக்குறுதியே
Dinakaran A