எம்பெருமான் இயேசுவும் சீடர்களும்
வழி நடந்து போக
வந்தான் ஒருவன், வாய் திறந்தான்
"ஆண்டவரே நீர் போகும் இடமெல்லாம்
அடி தொடர்வேன் என்றான்
அன்பின் ஆண்டவர் அவனைப் பார்த்து
ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடும்,
நரிகளுக்கு குழிகளுமுண்டு.
மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க,
மண்ணுலகில் இடமேது? என்றார்.
ஏன் அப்படிச் சொன்னார்?
இயேசு செய்த அற்புதங்களை
இருவிழிகளால் கண்டதாலோ?
பேரும் புகழும் பெருவரவேற்பும்
பெற்றிடலாம் என அவன் எண்ணினானோ?
எல்லம் அறிந்த இறைவன்
உள்ள நிலைமையை
உண்மையாய்ச் சொன்னார்.
வேறொருவனைக் கண்டார் இயேசு
"வரவேண்டும் நீ"
என்பின் என்றார்.
"ஆண்டவரே முன்பு என் தகப்பனை
அடக்கம் செய்திட,
அனுமதிப்பீர்" என்று
பணிவுடனே பதிலளித்தான்.
தகப்பன் மரித்தா கிடந்தார்?
இல்லை, இல்லை தகப்பன் மரித்தால்
அடக்கம் பண்ணும் கடமை
எனக்குள்ளதே! கடமை முடித்து
கச்சிதமாய் வருவேன் என்றான்,
மரித்தோர் தங்கள் மரித்தோரை
அடக்கம் செய்வார் அதுபற்றி
உனக்கேன் கவலை?
உடனே எனைப் பின்பற்றென
உலகநாதர் உவமய்யாகச் சொன்னார்.
விண்ணக வாழ்வு குறித்து
மண்ணகத்தில் சிந்தியாமல்
ஆத்தும பாரமின்றி உலகின் பின்னே
உல்லாசமாய் வாழ்வோர்
மரித்தோர்
மரித்தோர் மண்ணில் பலருண்டு,
மரணத்தார் உன் தந்தை என்றால்,
அடக்கம் செய்ய ஆயிரம் பேருண்டு.
ஆத்மபாரமுள்ள நீ வேண்டும்,
எனகென்றார் இயேசு பிரான்.
பின்னொருவன் ஓடி வந்தான்.
"பிதாவே உம்மைப் பின்பற்றுவேன்,
ஆயினும் அனுமதி எனக்கு வேண்டும்
வீட்டாரிடத்தில் விடை பெற்றுவர"
என் விருப்பம் போதாது,
என் குடும்பத்தார்விருப்பமும் தேவை
எனக் கூறுவதை நோக்குக்கால்
திட முடிவெடுக்க திராணியற்றவன்.
மதில் சுவர் பூனையென,
எப்பக்கமும் குதிக்கும் நிலையுடையோன்.
ஆகவே ஆண்டவர் சொன்னார்
கலப்பையிலே கை வைத்தபின்
திரும்பிப் பார்ப்பவன்
தேவ ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவனல்ல என்றார்.
ஆர்வமுடனே ஊழியத்தில்
அடியெடுத்து வைத்துவிட்டு
ஆடுகிற மனதாய் அலையாதே
இலக்கை நிர்ணயம் செய்தால்
இலட்சியம் அதுவே என
ஓட வேண்டும் ஓய்ந்திடாமல்,
உயரம் காண வேண்டும்,
இல்லையேல் இழப்பாய் இலக்கை.
இன்னலும் அடைவாய் என
இறைவன் ஓதி நின்றார்.
இம்மூவரில் நீர் எவராயுள்ளீர்?
சிந்திப்பீர் இக்கணமே!
செயல்படுவீர் மறுகணமே!
Author: Sis. Vanaja Paulraj