இது உங்களுக்கு ஒன்றுமில்லையா

அவரது அக்கினி
எலும்புகளில் எரிகிறதே !
இது உங்களுக்கு ஒன்றுமில்லையா?

இந்த உலகத்தைப் பாவம் கசக்கிப் பிழிகிறதே?
இது உங்களுக்கு ஒன்றுமில்லையா?

இன்னும் அறிவிக்கப்படாத கோடிகள் உண்டே?
இது உங்களுக்கு ஒன்றுமில்லையா?

இவ்வுலகம் தலைகுப்புற நரகத்துக்குத் தீவிரிக்கிறதே?
இது உங்களுக்கு ஒன்றுமில்லையா?

இவைகளுக்கு மத்தியிலும் சபை 
குறட்டையில் இருக்கிறதே? 
இது உங்களுக்கு ஒன்றுமில்லையா?

இதை எப்படி இவ்வளவு சர்வசாதாரணமாக 
உங்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது?
யாராவது எனக்கு இதைச் சொல்லமாட்டீர்களோ?

நானோ... மதவாதிகளின் மத மமதையையும்,
விசுவாசிகளின் மதிமயக்கத்தையும் கண்டு
நொந்து நோகிறேன்.....

 " HEART BREATHING'S" என்ற தலைப்பில் Rev. Leonard Ravenhill  அவர்களால் எழுதப்பட்ட  ஆங்கில கவிதைத் தொகுப்பை "இதயத் துடிப்பு" என்ற தலைப்பில் Pas. S. Romilton அவர்கள் தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார்.Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download