ஆண்டவரிடத்தில்
ஒன்றைக் கேளுங்கள்
ஒன்றாய் கேளுங்கள்
அதையும்
நன்றாய் கேளுங்கள்
ஆயுள் முழுவதும்
அவருடைய இல்லத்தில்
வசிக்கவும்
அவருடைய மகிமையைக்
ரசிக்கவும்
அவருடைய சித்தத்தைக்
யோசிக்கவும்
அனுதினம் கேளுங்கள்
வேறிடத்தில்
ஆயிரம் நாள்
வாழ்வதைப்பார்க்கிலும்
ஆண்டவருடைய
இல்லத்தில்
வாசம் செய்யும்
ஒரே நாளை விரும்புங்கள்
பொல்லாரின் கூடாரங்களில்
குடியிருப்பதைப்பார்க்கிலும்
ஆண்டவருடைய
இல்லத்தின்
வாசற்படியில் காத்திருப்பதையே
தெரிந்துகொள்ளுங்கள்
எவ்வளவு
தூரம் இருந்தாலும்
நேரம் தவறாமல்
ஆலயத்திற்கு செல்லுங்கள்
எவ்வளவு
பாரம் இருந்தாலும்
வாரம் தவறாமல்
ஆண்டவரிடம் சொல்லுங்கள்
எவ்வளவு
வேலை இருந்தாலும்
வேளை தவறாமல்
ஆண்டவரை நினையுங்கள்
எவ்வளவு
விசனம் இருந்தாலும்
வசனம் தவறாமல்
தியானத்துடன் படியுங்கள்
எவ்வளவு
பாடுகள் இருந்தாலும்
பாடல்கள் தவறாமல்
துதியுடன் பாடுங்கள்
எத்தனை
விசேஷம் இருந்தாலும்
சுவிசேஷம் தவறாமல்
பிறருக்கு அறிவியுங்கள்
ஆலயம் ஒன்றே போதும்
Author . Rev. M. Arul Doss