அழையும்
ஆண்டவரே,
அடியேன் கேட்கிறேன்
அறிவியும்
ஆண்டவரே,
அடியேன் செய்கிறேன்
அனுப்பும்
ஆண்டவரே,
அடியேன் செல்கிறேன்
தாயின் வயிற்றில்
கருவாகும் முன்னே
பேர்சொல்லி,
அழைத்தவர் நீரல்லவா!
உருவாகும் முன்னே
பரிசுத்தம்பண்ணி,
அபிஷேகித்தவர் நீரல்லவா!
எனக்கு
நினைவு தெரிந்த
நாள்முதலாய்
என் மனதில்
நிறைந்தவர் நீரல்லவா!
என் உயிரில்
உறைந்தவர் நீரல்லவா!
என் கலையை
அறிந்தவர் நீரல்லவா!
என் நிலையை
புரிந்தவர் நீரல்லவா!
என் உயிரே
உம்மை எப்படி மறப்பேன்!
என் உறவே
உம்மை எப்படி மறுப்பேன்!
என் வழியே
உம்மை எப்படி மறிப்பேன்!
என் விழியே
உம்மை எப்படி மறைப்பேன்!
உம் அழைப்புக்காக தான்
அடியேன்
காத்து கிடக்கிறேன்!
உம் அன்புக்காக தான்
அடியேன்
ஏங்கி கிடக்கிறேன்!
அழையும் ஆண்டவரே
உம்மை நாடி வருகிறேன்
விழையும் ஆண்டவரே
உம்மிடம் ஓடி வருகிறேன்
உமக்காக
வழிமேல் விழிவைத்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உமக்காக
நான் எதையும் செய்வேன்
உமக்காக
நான் எங்கும் செல்வேன்
Author . Rev. M. Arul Doss