வதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை வளர்த்து
ஆளாக்கிடுவார்
சிதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மைச் செதுக்கி
வடிவமைத்திடுவார்
புதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை விதைத்து
வளர்த்திடுவார்
உதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை உருவாக்கி
நிறுத்திடுவார்
பகைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மைப் பாதுகாத்து
பராமரித்திடுவார்
வாழ்வு தந்த கர்த்தர்
நம்மை வாழவைப்பார்
நமக்கு வழிகாட்டுவார்
நம்மை வழிநடத்துவார்
நமக்கு வழியாயிருப்பார்
அவரை
நம்பி வந்த நம்மை
ஒருபோதும் கைவிடவுமாட்டார்
அவரை
விரும்பி சேர்ந்த நம்மை
ஒருநாளும் வில(க்)கவுமாட்டார்
வெற்றியின் இரகசியம்-நம்
நெற்றியில் தெரியவைப்பார்
மாற்றத்தின் மகிமை- நம்
தோற்றத்தில் தெரியவைப்பார்
அகத்தின் அழகு- நம்
முகத்தில் தெரியவைப்பார்
உழைப்பின் பலன்- நம்
பிழைப்பில் தெரியவைப்பார்
ஊழியத்தின் நலன்- நம்
ஜீவியத்தில் தெரியவைப்பார்
சோர்ந்து போகாமல்
கர்த்தரையே சார்ந்து வாழுவோம்
அவருடன் சேர்ந்து வாழுவோம்
Author . Rev. M. Arul Doss
வதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை வளர்த்து
ஆளாக்கிடுவார்
சிதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மைச் செதுக்கி
வடிவமைத்திடுவார்
புதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை விதைத்து
வளர்த்திடுவார்
உதைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மை உருவாக்கி
நிறுத்திடுவார்
பகைத்து
விடலாம் என்று
நினைத்தவர் மத்தியில்
நம்மைப் பாதுகாத்து
பராமரித்திடுவார்
வாழ்வு தந்த கர்த்தர்
நம்மை வாழவைப்பார்
நமக்கு வழிகாட்டுவார்
நம்மை வழிநடத்துவார்
நமக்கு வழியாயிருப்பார்
அவரை
நம்பி வந்த நம்மை
ஒருபோதும் கைவிடவுமாட்டார்
அவரை
விரும்பி சேர்ந்த நம்மை
ஒருநாளும் வில(க்)கவுமாட்டார்
வெற்றியின் இரகசியம்-நம்
நெற்றியில் தெரியவைப்பார்
மாற்றத்தின் மகிமை- நம்
தோற்றத்தில் தெரியவைப்பார்
அகத்தின் அழகு- நம்
முகத்தில் தெரியவைப்பார்
உழைப்பின் பலன்- நம்
பிழைப்பில் தெரியவைப்பார்
ஊழியத்தின் நலன்- நம்
ஜீவியத்தில் தெரியவைப்பார்
சோர்ந்து போகாமல்
கர்த்தரையே சார்ந்து வாழுவோம்
அவருடன் சேர்ந்து வாழுவோம்
Author . Rev. M. Arul Doss