மரத்துப்போன இதயத்துக்கு மருந்த தேடுறேன்
எனக்காய் மறிச்ச இயேசு ஸ்வாமிய நான் மறந்து வாழுறேன்
காயம் ஆரியும் தினம் அந்த தளும்ப பாக்குறேன்
சாயம் வெளுக்குன்னு தினம் புது வர்ணம் பூசுறேன்
துணிகரமா பாவம் செய்ய மனசு சொல்லுது
தூயவரின் எச்சரிப்பை கேட்க மறுக்குது
ஆதியிலே கொண்ட அன்பை மறந்துவிட்டேனோ- உலக
அதிபதியின் சீடனாக மாறிவிட்டேனோ
தீய மனதை மாற்ற நானும் வேண்டுதல் செய்வேன்
தூய ஆவி அருளைப்பெற மீண்டும் வருகிறேன்
ஆவி ஆத்ம சரீரத்தை உமக்கு தருகிறேன் - நீர்
ஆண்டுகொள்ளும் என்னை உந்தன் பாதம் தருகிறேன்
A Dinakaran, Chennai