சிந்திக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
திறமையை காணலாம்
சந்திக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
பொறுமையை காணலாம்
போசிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
பாசத்தை காணலாம்
விசாரிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
நேசத்தை காணலாம்
சம்பாசிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
சந்தோசத்தை காணலாம்
சம்பாதிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
முயற்சியை காணலாம்
விவாதிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
பயிற்சியை காணலாம்
ஜெபிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
பக்தியை காணலாம்
துதிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
சக்தியை காணலாம்
படிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
அறிவை காணலாம்
தியானிக்க
நேரம் ஒதுக்குங்கள்
அதில் உங்கள்
ஞானத்தை காணலாம்
காலம் கண் போன்றது
கடமை பொன் போன்றது
எனவே நேரம் ஒதுக்குங்கள்
Author . Rev. M. Arul Doss