உறவுகளின் நிலைகள்

ஆதியிலே
கொண்ட உறவை 
விட்டுவிடாதீர் 
அதற்கு விட்டுக்கொடுங்கள்
பாதியிலே
சென்ற உறவை 
தொட்டுவிடாதீர்
அதை விட்டுவிடுங்கள்

குணத்தைப் பார்த்து
வரும் உறவை 
மறந்துவிடாதீர்
அதை நினைத்துவிடுங்கள்
பணத்தைப் பார்த்து
சேரும் உறவை 
இணைத்துவிடாதீர்
அதை தவிர்த்துவிடுங்கள்

கடமைக்காக
வாழும் உறவு
கடைசிவரை நிலைக்காது 
உடைமைக்காக
வாழ்த்தும் உறவு
உறுதுணையாக நிற்காது 

எனவே,
நன்றாக புரிந்துகொண்டு
வாழ்க்கை நடத்திடுங்கள்
ஒன்றாக கலந்துபேசி
நல்லமுடிவு எடுத்திடுங்கள்

ஆஸ்திக்காக
வளர்க்கும் உறவு
ஆகாரம் தராது 
ஆசைக்காக
வளர்க்கும் உறவு
ஆதரவு தராது 

எனவே,
நிலைமையை
அறிந்துகொண்டு
உங்களுக்காக 
சேமித்திடுங்கள்
நிரந்தரம் எதுவென்று
நிம்மதியை தேடிடுங்கள்

உதவிக்காக
இருக்கும் உறவு
உபகாரம் செய்யாது 
பதவிக்காக
அமர்த்தும் உறவு
பரிந்துரை செய்யாது

எனவே,
உழைக்கத்
தெரிந்துகொண்டு
உயர்ந்து காட்டிடுங்கள்
பிழைக்கக்
கற்றுக்கொண்டு
வளர்ந்து முன்னேறிடுங்கள்

Author . Rev. M. Arul Doss



Topics: Bible Kavithaigal

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download