சந்தித்த
மோசமான மனிதர்கள்
கடந்த கால தோல்விகள்
நட்பெனும் பெயரில்
துரோகங்கள்
பிறப்பெனும்
பெயரில்
உடன் பிறந்தோரின்
பிரிவினைகள்
வேறு தேசம்
வேறு மொழி
வேறு மக்கள்
தனிமைப்படுத்தப்பட்ட
நிலையில்
அடிமை வாழ்வில்
சிறை வாழ்வில்
அரசாங்க வாழ்வில்
கனவு தந்த தேவன்
என் வாழ்வில்
நாயகனாய்
கூட இருந்து
எல்லாவற்றுக்கும்
எல்லாமுமாய் இருந்து
ஆற்றித் தேற்றி
வழிநடத்தினார்
எகிப்து அரசனுக்கு
இணையாக உயர்த்தினார்
சொந்த ஜனம்
குழியில் தள்ளியது
தேவனோ தள்ளிய
இடத்திலிருந்து தூக்கினார்
எகிப்து அரசனின்
கண்களில் தயவு
கிடைக்கச் செய்தார்
கொடுத்த சொப்பனத்தின்படி வாழ்க்கையை
செதுக்கினார்
என் பாதையில்
கடந்து செல்லும்
தேவ பிள்ளைகளே
சொப்பனத்தின்
தேவன்
வாக்குத்தத்தத்தின் தேவன்
உங்களை கைவிடமாட்டார்
நடத்துவார்
விசுவாசியுங்கள்
தேவன் நம்மோடு இருக்கிறார்
கவிமுகில் சுரேஷ்
தர்மபுரி