சொல் உடலாகியது .....
தொடக்க முதலே இருந்த சொல் அது
தொடக்கத்தில் கடவுளிடமிருந்த சொல்
தொடக்க முதலே கடவுளாக இருந்த சொல்
தொடக்கம் முதல் கடவுளோடு இருந்த சொல்
எல்லாம் அவர் மூலம் உண்டாயிற்று
எல்லாம் அவராலேயன்றி உண்டாகவில்லை
எல்லா வாழ்வும் அவருக்குள் இருந்தது
எல்லா வாழ்வும் ஒளியாய் இருந்தது
பாவ இருளில் சுடர் வீசுகிறது
பாவஇருள் சுடரை பற்ற நினைக்கிறது
இருள் பற்ற நினைத்து தோல்வியடைகிறது
இருளை மேற்கொண்டு ஒளி வீசுகிறது
ஒளியை குறித்து சாட்சி அறிவிக்க
ஒருவன் வந்தான் கூறி அறிவிக்க
யோவான் என்பது அவனது திருப்பெயர்
யாவரும் அறிந்த அவரே முழுக்குனர்
கடவுளால் அனுப்பபட்ட ஒருவன்
கறைப்படாமல் தன்னை காத்துக் கொண்டவன்;
காரிருள் உள்ளத்துக்கு ஒளியை அறிவித்தவன்;
காட்டுத் தேனை உணவாய் கொண்டவன்
மக்கள் தன்னை பின்பற்ற அல்ல
மக்கள் ஒளியை பின்பற்றவல்ல
ஒளியை அறிவிக்க விரைந்து வந்தவன்;
ஒளியை தன்னில் முதலில் உணர்ந்தவன்
உலகத்திலே வந்து சுடர் வீசுகிற ஒளி;
உலகத்திலே மனுஷனை ஒளிர்விக்க வந்த ஒளி;
இயைசுவே அந்த மெய்யான ஒளி;
இல்லை அவர் தவிர வேறு ஒளி...
இயேசு சுடர் வீச உலகிலே வந்தார்-மனிதர்
இயேசுவை அறியாமல்
இருளிலே இருந்தார்;
பாவ மனிதனை சொந்தம் கொள்ளவே வந்தனர்;
பாவ மனிதர் சொந்தம் கொள்ள மறுத்து விட்டனர்
இயேசுவின் பெயரிலே பற்றுருதி கொண்டோர்
பற்றுருதி கொண்டோர் எத்தனை பேர்களோ
அத்தனை பேர்களும் கடவுளின் பிள்ளைகள்- என்ற
உரிமை பெற்றவர் ஆனார்கள்
கடவுளின் பிள்ளைகள் பிறப்பதில்லை மனித விருப்பப்படி;
கடவுளின் பிள்ளைகள் பிறப்பதில்லை கணவன் இச்சைப்படி;
கடவுளின் பிள்ளைகள் பிறப்பதில்லை இரத்தத்தின்படி;
கடவுளின் பிள்ளைகள் பிறக்கிறார்கள் கடவுளின் விருப்பப்படி...
சொல்லானவர் உடல் எடுத்தார் நமக்காக;
வாய்மையும் அருளும் கொண்டார் நமக்காக;
அவருடைய மாட்சிமையை கண்டோம் தந்தையின் உயர் மாட்சிமையை போல...
Author . Bro. David Dhanraj