ஆயத்தப்படு!! ஆயத்தப்படு !!
உன் தேவனை சந்திக்க ஆயத்தப்படு
துன்மார்க்கரோடுள்ள நட்பை விடு
தூயவருக்கு உன் மனதைக் கொடு
பாவ சுபாவங்களை விட்டோடிடு
பரம அழைப்பிற்கு உன் செவியைக் கொடு
வேதத்தை தினமும் உன் கையில் எடு
வெளிச்சத்தை தந்திடும் தீபம் அது
தேவ தேவனை நீ நெருங்கிடு
வருகை வெகு விரைவில் விழித்திரு
உன் விளக்கை எண்ணெயால் நிரப்பிடு
மணவாளன் வருகிறார் புறப்படு
தூய வாழ்வை தினம் விரும்பிடு
துன்ப துயரங்களை சகித்திடு
Author: Bro. A. Dinakaran