உங்களால்
இயன்றவரை
இல்லாதவருக்குக் கொடுங்கள்
உங்களால்
முயன்றவரை
முடியாதவருக்குச் செய்யுங்கள்
நீங்கள் செய்கிற உதவி
சிறியதாய் இருந்தாலும்
உரிய நேரத்தில்
உரியவருக்கும்
வறியவருக்கும் செய்தால்
தகுந்த நேரத்தில்
சிறியவருக்கும்
எளியவருக்கும் கொடுத்தால்
அவர்கள் அவைகளை
அரியதாய்
பெரியதாய்
உரியதாய்
ஏற்றுக்கொள்வார்கள்
எனவே
கர்த்தர் உங்களுக்கு
என்ன செய்ய திட்டம்
வைத்திருக்கிறாரோ
அவைகளையே செய்யுங்கள்
என்ன செய்ய சித்தம்
கொண்டிருக்கிறாரோ
அவைகளையே செய்யுங்கள்
என்னத்தை உண்போம்
என்று உங்கள்
உடலுக்காகவும் (மத்தேயு 6:25)
என்னத்தை உடுப்போம்
என்று உங்கள்
உடைக்காகவும்
எங்கே உறங்குவோம்
என்று உங்கள்
உறைவிடத்துக்காகவும்
கவலைப்படாதிருங்கள்
நம் பரம தந்தை
நாம் வேண்டுவதையும்
அறிந்திருக்கிறார் (மத்தேயு 6:8)
நமக்கு வேண்டியதையும்
அறிந்திருக்கிறார் (மத்தேயு 6:32)
எனவே
நாளைக்காக கவலைப்படாதிருங்கள்
நாளைய கவலையைப் போக்க
நல்ல வேலையும் கிடைக்கும்
நல்ல வேளையும் பிறக்கும்
எனவே
கர்த்தரைத் தேடுங்கள் (மத்தேயு 6:33)
உங்களுக்குக் கொடுக்கப்படும்
கர்த்தரிடம் கேளுங்கள் (மத்தேயு 7:7)
உங்களுக்குக் கொடுக்கப்படும்
கர்த்தருக்காக கொடுங்கள் (லூக்கா 6:38)
உங்களுக்குக் கொடுக்கப்படும்
Author . Rev. M. Arul Doss