ஆலயத்தை கட்டிவிட்டா கோயிலு ஆகிடுமா?
ஆண்டவர் தாங்காம அவர் வீடாகிடுமா?
திருச்சபைக்கு தலைவர் என்றும் இயேசு மட்டும் தான்
அதுல நீயும் நானும் எப்போதும் ஒரு பாகம் மட்டும் தான்
தினம் தினம் ஜெபம் பண்ணுறோம்
தவறாம கோயில் போகுறோம்
திருமுழுக்க நாமும் பெறுகிறோம்
திருவிருந்தில் பங்கு கொள்ளுறோம்
தேர்தல் என்று வந்தா மட்டும்
ஒற்றுமையை ஏன் இழக்கிறோம்
தேவனை மகிமைப் படுத்திட
இது என்றும் நல்ல செயல் இல்ல
தேவனுக்கு முன்பாக சிறியோர் பெரியோர் இல்ல!!
பண்டிகை கிறிஸ்தவராக
வாழ்வதில் என்ன பயனுண்டு
பரமனின் உன்னத பணியை
செய்திட நம்மில்யாருண்டு
இதயம் தான் அவரின் ஆலயம்
அலங்கரி தேவன் தங்கணும்
இருப்பது ஒரே வாழ்வு தான்
அவருக்காய் வாழ்ந்து காட்டணும்
சபையென ஓன்று சேர்ந்து அவரை உயர்த்தனும்!!
A. Dinakaran