இறைவா உன்னை வணங்க,
என் இருகரம் குவித்து நின்றேன்,
வரமே உன்னை கேட்க,
நான் சிரமே தாள் பணிந்தேன்.
வானகம் வாழும் தந்தாய்!
வாழ்த்துவேன் உந்தன் நாமம்!
பரிசுத்தமான உன் நாமம்,
போற்றுவேன் என்றும், என்றும்!
உந்தன் ஆட்சி வந்திட வேண்டும்,
உந்தன் புகழ் பாடிட வேண்டும்,
விண்ணிலுள்ள உந்தன் சித்தம் போல்,
மண்ணிலும் நிறைவேற வேண்டும்.
அனுதின அப்பம் தாரும்,
அன்னையே நீ தான் அன்றோ?
அயலார் செய்த குற்றம்,
மன்னித்தேன் என்னையும் மன்னியும்,
சோதனைக்கு எந்தனை நீர்,
விலக்கிக் காத்து இரட்சியும்,
தீயோனிடமிருந்து என்னை,
விடுவித்து வெற்றி வாழ்வு தாரும்,
ஆட்சி, வல்லமை, மகிமை,
அத்தனையும் என்றும் உமதே,
தன்னைத் தந்த கிறிஸ்தேசு மூலம்,
தந்தேன் என் ஜெபம் கேளும், ஆமென்.
Author: Sis. Vanaja Paulraj