பகுத்தறிதல்

“பகுத்தறிவு என்பது சரி மற்றும் தவறுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை மாத்திரம் கூறுவது அல்ல;  மாறாக அது சரியான மற்றும் கிட்டத்தட்ட சரியான வித்தியாசத்தை சொல்வதாகும்" ஸ்பர்ஜன் கூறினார்.

தீர்க்கதரிசன பகுத்தறிவு:
தீர்க்கதரிசிகள் என்பவர்கள் வரப் போகும் காரியங்களை முன்னரே அறிவிப்பவர்கள். மேலும் தேவ நியமனங்களை தெளிவாக விளக்கி அதை சூழலுக்குப் பயன்படுத்த உதவுபவர்கள். வேதங்களில் தேவன் யார் என்பதும் அவரின் நீதி நியாயங்கள் பற்றியும் வெளிப்படுத்தப் பட்டிருக்கும்; அப்போது அதைக் கற்றுக் கொள்ளும்  ஜனங்கள் தேவனின் தராதரங்களை அறிந்து அதன்படி வாழ முயற்சிப்பார்கள்.  இவ்வாறு, தீர்க்கதரிசிகள் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், நகரங்கள் மற்றும் நாடுகள் என மனந்திரும்ப அழைக்கிறார்கள். ஆம், யோனா தீர்க்கதரிசி நினிவே பட்டணத்தை மனந்திரும்பும்படி அழைத்தார்.  தீர்க்கதரிசிகள் எதிர்கால நிகழ்வுகளையும் புரிந்துகொள்கிறார்கள்.  எரேமியா பாபிலோனிய நாடுகடத்தலின் எழுபது வருடங்களை முன்னறிவித்தாரே (எரேமியா 25:9-13).

ஆவிக்குரிய பகுத்தறிவு:
 உலகம் நிறைய தத்துவங்கள், மதக் கருத்துக்கள், மரபுகள் மற்றும் கடவுளை நோக்கிய பாதைகளால் நிரம்பியுள்ளது.  எனவே கள்ளப் போதகர்கள், கள்ள போதனைகள், குருட்டு வழிகாட்டிகள், கள்ள மேசியாக்கள் மற்றும் மதங்களுக்கு எதிரான கொள்கைகள் உள்ளன.  கள்ள நாணயங்கள் அசலை ஒத்திருக்கும்.  அதே போல, இந்த ஆன்மிகங்கள் உண்மை போல இருந்தாலும் போலியானவை.  அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு சோதனையைக் கொடுக்கிறார்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதலை மறுக்கும் அனைத்து மதத் தத்துவங்களும் பொய்யானவை, அவை நிராகரிக்கப்பட வேண்டும்.

 கர்த்தருடைய நேரம் பற்றிய பகுத்தறிவு:
பரிசேயர்களும் சதுசேயர்களும் வேதாகமத்தை வைத்திருந்தனர் மற்றும் மேசியாவின் முதலாம் வருகையைப் பற்றி அறிந்திருந்தனர்.  ஆனால் அவர்கள் காலத்தின் அறிகுறிகளை அறிய முடியவில்லை, மேலும் புதிய அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதில் மட்டுமே வெறித்தனமாக இருந்தனர் (மத்தேயு 16:3-4). அவர்கள் மேசியாவை தவறவிட்டார்கள், மிக மோசமாக, அவர்கள் மேசியாவை சிலுவையில் அறைந்தார்கள்.

 சரி அல்லது மிகச்சரி:
 யோசேப்புக்கு எகிப்தின் சிறையிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது, அதை அவன் பார்வோனின் சமையல்காரரிடம் வெளிப்படுத்தினான்.  ஆனாலும் இரண்டு வருடங்களாக பானபாத்திரக்காரனின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான் (ஆதியாகமம் 40:23).   யோசேப்பு பார்வோனுக்கு முன்பாக நின்றபோது, ​​அவன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்படி கேட்கவில்லை, மாறாக சரியானதைச் செய்தான்.  இஸ்ரவேல் தேசம் கட்டப்படுவதற்காக உயிர்களைக் காக்க அவன் எகிப்தில் இருந்தான் (ஆதியாகமம் 45:5). யோசேப்பு வீட்டிற்கு திரும்பச் செல்வது என்பது ஏறக்குறைய சரியானதே, ஆனால் தேவ திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற எகிப்தில் இருப்பது தான் மிகச் சரியான விஷயம்.

 பகுத்தறியும் தலைவர்கள்:
 அப்போஸ்தலனாகிய பவுல், மாற்கு என்னும் பேர் கொண்ட யோவானுக்கான தேவ அழைப்பையும் திறனையும் அறியத் தவறிவிட்டார் (அப்போஸ்தலர் 15:36-41). ஆனால் பிற்காலங்களில் அவர் மாற்கு யோவானை அடையாளம் கண்டுகொண்டார்; ஆம் பகுத்தறிந்து கொண்டார் (2 தீமோத்தேயு 4:11).

 எனக்கு பகுத்தறியும் வரம் உள்ளதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more