ரோமர் 5:12-21

5:12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
5:13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
5:14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
5:15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
5:16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
5:17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
5:18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
5:20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
5:21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.




Related Topics



பழைய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு, எம்மாவு என்னும் கிராமத்துக்கு போகின்ற வழியில் பழைய ஏற்பாட்டிலிருந்து தன்னைப் பற்றி இரண்டு...
Read More



இப்படியாக , ஒரே , மனுஷனாலே , பாவமும் , பாவத்தினாலே , மரணமும் , உலகத்திலே , பிரவேசித்ததுபோலவும் , எல்லா , மனுஷரும் , பாவஞ்செய்தபடியால் , மரணம் , எல்லாருக்கும் , வந்ததுபோலவும் , இதுவுமாயிற்று , ரோமர் 5:12 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 5 TAMIL BIBLE , ரோமர் 5 IN TAMIL , ரோமர் 5 12 IN TAMIL , ரோமர் 5 12 IN TAMIL BIBLE , ரோமர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Romans 5 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 5 TAMIL BIBLE , Romans 5 IN TAMIL , Romans 5 12 IN TAMIL , Romans 5 12 IN TAMIL BIBLE . Romans 5 IN ENGLISH ,