வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22

3:14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
3:15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
3:16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
3:17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
3:18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
3:19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
3:20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
3:22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.




Related Topics


லவோதிக்கேயா , சபையின் , தூதனுக்கு , நீ , எழுதவேண்டியது , என்னவெனில்: , உண்மையும் , சத்தியமுமுள்ள , சாட்சியும் , தேவனுடைய , சிருஷ்டிக்கு , ஆதியுமாயிருக்கிற , ஆமென் , என்பவர் , சொல்லுகிறதாவது; , வெளிப்படுத்தின விசேஷம் 3:14 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 14 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 3 14 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 3 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 3 TAMIL BIBLE , Revelation 3 IN TAMIL , Revelation 3 14 IN TAMIL , Revelation 3 14 IN TAMIL BIBLE . Revelation 3 IN ENGLISH ,