வெளிப்படுத்தின விசேஷம் 2:14-20

2:14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
2:16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
2:18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
2:19 உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.




Related Topics


ஆகிலும் , சில , காரியங்களைக்குறித்து , உன்பேரில் , எனக்குக் , குறை , உண்டு; , விக்கிரகங்களுக்குப் , படைத்தவைகளைப் , புசிப்பதற்கும் , வேசித்தனம்பண்ணுவதற்கும் , ஏதுவான , இடறலை , இஸ்ரவேல் , புத்திரர்முன்பாகப் , போடும்படி , பாலாக் , என்பவனுக்குப் , போதனை , செய்த , பிலேயாமுடைய , போதகத்தைக் , கைக்கொள்ளுகிறவர்கள் , உன்னிடத்திலுண்டு , வெளிப்படுத்தின விசேஷம் 2:14 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 14 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 14 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 2 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 2 TAMIL BIBLE , Revelation 2 IN TAMIL , Revelation 2 14 IN TAMIL , Revelation 2 14 IN TAMIL BIBLE . Revelation 2 IN ENGLISH ,