வெளிப்படுத்தின விசேஷம் 2:12-17

2:12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
2:13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
2:14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
2:15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
2:16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.




Related Topics


பெர்கமு , சபையின் , தூதனுக்கு , நீ , எழுதவேண்டியது , என்னவெனில்: , இருபுறமும் , கருக்குள்ள , பட்டயத்தை , உடையவர் , சொல்லுகிறதாவது; , வெளிப்படுத்தின விசேஷம் 2:12 , வெளிப்படுத்தின விசேஷம் , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 12 IN TAMIL , வெளிப்படுத்தின விசேஷம் 2 12 IN TAMIL BIBLE , வெளிப்படுத்தின விசேஷம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Revelation 2 , TAMIL BIBLE Revelation , Revelation IN TAMIL BIBLE , Revelation IN TAMIL , Revelation 2 TAMIL BIBLE , Revelation 2 IN TAMIL , Revelation 2 12 IN TAMIL , Revelation 2 12 IN TAMIL BIBLE . Revelation 2 IN ENGLISH ,