எண்ணாகமம் 7:1-9

7:1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,
7:2 தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
7:3 தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
7:4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
7:5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
7:6 அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.
7:7 இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
7:8 நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
7:9 கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.




Related Topics



சலுகை அல்லது நோக்கம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பணக்காரன் தன் மகனுக்கு அவன் விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தான். அந்த பையனின் நண்பன் ஜாகுவார் கார் வாங்கினான். சிறுவன்...
Read More



மோசே , வாசஸ்தலத்தை , ஸ்தாபனம்பண்ணி , அதையும் , அதின் , எல்லாப் , பணிமுட்டுகளையும் , பலிபீடத்தையும் , அதின் , எல்லாப் , பணிமுட்டுகளையும் , அபிஷேகம்பண்ணி , பரிசுத்தப்படுத்தி , முடித்தநாளில் , , எண்ணாகமம் 7:1 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 7 TAMIL BIBLE , எண்ணாகமம் 7 IN TAMIL , எண்ணாகமம் 7 1 IN TAMIL , எண்ணாகமம் 7 1 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 7 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 7 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 7 TAMIL BIBLE , Numbers 7 IN TAMIL , Numbers 7 1 IN TAMIL , Numbers 7 1 IN TAMIL BIBLE . Numbers 7 IN ENGLISH ,