26:9 எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
26:10 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
26:11 கோராகின் குமாரரோ சாகவில்லை.