எண்ணாகமம் 14:11-20

14:11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
14:12 நான் அவர்களைக் கொள்ளை நோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
14:13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.
14:14 கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள், இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள்.
14:15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்:
14:16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
14:17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
14:18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக.
14:19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
14:20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.




Related Topics


கர்த்தர் , மோசேயை , நோக்கி: , எதுவரைக்கும் , இந்த , ஜனங்கள் , எனக்குக் , கோபம் , உண்டாக்குவார்கள்? , தங்களுக்குள்ளே , நான் , காட்டின , சகல , அடையாளங்களையும் , அவர்கள் , கண்டும் , எதுவரைக்கும் , என்னை , விசுவாசியாதிருப்பார்கள்? , எண்ணாகமம் 14:11 , எண்ணாகமம் , எண்ணாகமம் IN TAMIL BIBLE , எண்ணாகமம் IN TAMIL , எண்ணாகமம் 14 TAMIL BIBLE , எண்ணாகமம் 14 IN TAMIL , எண்ணாகமம் 14 11 IN TAMIL , எண்ணாகமம் 14 11 IN TAMIL BIBLE , எண்ணாகமம் 14 IN ENGLISH , TAMIL BIBLE Numbers 14 , TAMIL BIBLE Numbers , Numbers IN TAMIL BIBLE , Numbers IN TAMIL , Numbers 14 TAMIL BIBLE , Numbers 14 IN TAMIL , Numbers 14 11 IN TAMIL , Numbers 14 11 IN TAMIL BIBLE . Numbers 14 IN ENGLISH ,