மத்தேயு 24:36-44

24:36 அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
24:37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
24:38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
24:39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
24:40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
24:41 இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
24:42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
24:43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
24:44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.




Related Topics


அந்த , நாளையும் , அந்த , நாழிகைகளையும் , என் , பிதா , ஒருவர் , தவிர , மற்றொருவனும் , அறியான்; , பரலோகத்திலுள்ள , தூதர்களும் , அறியார்கள் , மத்தேயு 24:36 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 24 TAMIL BIBLE , மத்தேயு 24 IN TAMIL , மத்தேயு 24 36 IN TAMIL , மத்தேயு 24 36 IN TAMIL BIBLE , மத்தேயு 24 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 24 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 24 TAMIL BIBLE , Matthew 24 IN TAMIL , Matthew 24 36 IN TAMIL , Matthew 24 36 IN TAMIL BIBLE . Matthew 24 IN ENGLISH ,