மத்தேயு 15:21-28

15:21 பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
15:22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
15:23 அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
15:24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
15:25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப்பணிந்து கொண்டாள்.
15:26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
15:27 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.
15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.




Related Topics



விசுவாசத்திற்கேற்ற கிரியை-Rev. Dr. C. Rajasekaran

கிரியையில்லா விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறார். விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம் (எபிரேயர் 11:6). விசுவாசம்...
Read More



பின்பு , இயேசு , அவ்விடம் , விட்டுப் , புறப்பட்டு , தீரு , சீதோன் , பட்டணங்களின் , திசைகளுக்குப் , போனார் , மத்தேயு 15:21 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 15 TAMIL BIBLE , மத்தேயு 15 IN TAMIL , மத்தேயு 15 21 IN TAMIL , மத்தேயு 15 21 IN TAMIL BIBLE , மத்தேயு 15 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 15 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 15 TAMIL BIBLE , Matthew 15 IN TAMIL , Matthew 15 21 IN TAMIL , Matthew 15 21 IN TAMIL BIBLE . Matthew 15 IN ENGLISH ,