மத்தேயு 14:1-12

14:1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
14:2 தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
14:3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப்பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான்.
14:4 ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.
14:5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.
14:6 அப்படியிருக்க ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.
14:7 அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.
14:8 அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள்.
14:9 ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,
14:10 ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.
14:11 அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்திலே கொண்டு போனாள்.
14:12 அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.




Related Topics



‘ரீல்ஸ் குயினின்’ தற்கொலை!?-Rev. Dr. J .N. மனோகரன்

நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது சிறுமி, இன்ஸ்டாகிராமில் ஆறு மாதங்களிலே 70 ரீல்கள் வெளியிடுகிறாள். மிக விரைவில் பிரபலமாகியும் விட்டாள். அவளது...
Read More



அக்காலத்தில் , காற்பங்கு , தேசாதிபதியாகிய , ஏரோது , இயேசுவின் , கீர்த்தியைக் , கேள்விப்பட்டு , , மத்தேயு 14:1 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 14 TAMIL BIBLE , மத்தேயு 14 IN TAMIL , மத்தேயு 14 1 IN TAMIL , மத்தேயு 14 1 IN TAMIL BIBLE , மத்தேயு 14 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 14 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 14 TAMIL BIBLE , Matthew 14 IN TAMIL , Matthew 14 1 IN TAMIL , Matthew 14 1 IN TAMIL BIBLE . Matthew 14 IN ENGLISH ,