மாற்கு 8:14-20

8:14 சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பமாத்திரம் இருந்தது.
8:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார்.
8:16 அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8:17 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?
8:18 உங்களுக்கு கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?
8:19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள்.
8:20 நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள்.




Related Topics



கண்டிக்கும் கேள்விகள்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஈஸ்ட் (புளிப்பு) பற்றி போதித்தார்.  ஈஸ்ட் என்பது அசல் பாவத்தை குறிக்கிறது என்று யூத அறிஞர்கள் நம்பினர்.  செய்தியின்...
Read More



சீஷர்கள் , அப்பங்களைக் , கொண்டுவர , மறந்துபோனார்கள்; , படவிலே , அவர்களிடத்தில் , ஒரு , அப்பமாத்திரம் , இருந்தது , மாற்கு 8:14 , மாற்கு , மாற்கு IN TAMIL BIBLE , மாற்கு IN TAMIL , மாற்கு 8 TAMIL BIBLE , மாற்கு 8 IN TAMIL , மாற்கு 8 14 IN TAMIL , மாற்கு 8 14 IN TAMIL BIBLE , மாற்கு 8 IN ENGLISH , TAMIL BIBLE Mark 8 , TAMIL BIBLE Mark , Mark IN TAMIL BIBLE , Mark IN TAMIL , Mark 8 TAMIL BIBLE , Mark 8 IN TAMIL , Mark 8 14 IN TAMIL , Mark 8 14 IN TAMIL BIBLE . Mark 8 IN ENGLISH ,