லூக்கா 5:1-11

5:1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
5:2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
5:3 அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
5:4 அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5:5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
5:6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
5:7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
5:8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.
5:9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியால் அப்படிச் சொன்னான்.
5:10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
5:11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.




Related Topics



விசுவாசத்திற்கேற்ற கிரியை-Rev. Dr. C. Rajasekaran

கிரியையில்லா விசுவாசம் செத்தது என்று யாக்கோபு கூறுகிறார். விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம் (எபிரேயர் 11:6). விசுவாசம்...
Read More




கண்ணோட்டம் மாறுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட உறவை அனுபவித்தவர்கள் நல்ல ஒரு மாற்றத்தை நிரந்தரமாக அடைகிறார்கள். அப்படி மாற்றப்பட்ட...
Read More




நல்ல சமாரியன் போல சேவை செய்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு சகேயுவின் வீட்டிற்கு அழைக்கப்பட்டார் (லூக்கா 19:5). சுவிசேஷப் பிரசங்கிப்போரை மக்கள் பகிர்ந்துகொள்ள அழைக்கும் சந்தர்ப்பங்கள்...
Read More



பின்பு , அவர் , கெனேசரேத்துக் , கடலருகே , நின்றபோது , திரளான , ஜனங்கள் , தேவவசனத்தைக் , கேட்கும்படி , அவரிடத்தில் , நெருங்கினார்கள் , லூக்கா 5:1 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 5 TAMIL BIBLE , லூக்கா 5 IN TAMIL , லூக்கா 5 1 IN TAMIL , லூக்கா 5 1 IN TAMIL BIBLE , லூக்கா 5 IN ENGLISH , TAMIL BIBLE Luke 5 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 5 TAMIL BIBLE , Luke 5 IN TAMIL , Luke 5 1 IN TAMIL , Luke 5 1 IN TAMIL BIBLE . Luke 5 IN ENGLISH ,