நியாயாதிபதிகள் 15:9-17

15:9 அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள்.
15:10 நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள்.
15:11 அப்பொழுது யூதாவிலே மூவாயிரம் பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப்போய் பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான்.
15:12 அப்பொழுது அவர்கள்: உன்னைக்கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான்.
15:13 அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னை கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள்.
15:14 அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று.
15:15 உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்.
15:16 அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான்.
15:17 அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்றுபேரிட்டான்.




Related Topics



நம் கையில் என்ன இருக்கிறது?-Rev. Dr. J .N. மனோகரன்

பல நேரங்களில், தேவ ஜனங்கள் தங்கள் கைகளில் இருக்கும் வளங்களின் மதிப்பை அறிய மாட்டார்கள்.  இருப்பினும், தேவன் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும்,...
Read More



அப்பொழுது , பெலிஸ்தர் , போய் , யூதாவிலே , பாளயமிறங்கி , லேகி , என்கிற , வெளியிலே , பரவியிருந்தார்கள் , நியாயாதிபதிகள் 15:9 , நியாயாதிபதிகள் , நியாயாதிபதிகள் IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் IN TAMIL , நியாயாதிபதிகள் 15 TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 15 IN TAMIL , நியாயாதிபதிகள் 15 9 IN TAMIL , நியாயாதிபதிகள் 15 9 IN TAMIL BIBLE , நியாயாதிபதிகள் 15 IN ENGLISH , TAMIL BIBLE JUDGES 15 , TAMIL BIBLE JUDGES , JUDGES IN TAMIL BIBLE , JUDGES IN TAMIL , JUDGES 15 TAMIL BIBLE , JUDGES 15 IN TAMIL , JUDGES 15 9 IN TAMIL , JUDGES 15 9 IN TAMIL BIBLE . JUDGES 15 IN ENGLISH ,